பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை - நெல்லுார் புறநகர் ரயில் மீண்டும் இயக்க பயணியர் கோரிக்கை

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை : கொரோனா தாக்கத்தால் ரத்து செய்யப்பட்ட, சென்னை - நெல்லுார் புறநகர் மின்சார ரயில்கள், மீண்டும் இயக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.சென்னை சென்ட்ரலில் இருந்து, ஆந்திரா மாநிலம் நெல்லுாருக்கு, காலை 7:45 மணி மற்றும், மதியம் 1:35 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில், வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். கொரோனா ஊரடங்கால், இந்த ரயில்கள்


சென்னை : கொரோனா தாக்கத்தால் ரத்து செய்யப்பட்ட, சென்னை - நெல்லுார் புறநகர் மின்சார ரயில்கள், மீண்டும் இயக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து, ஆந்திரா மாநிலம் நெல்லுாருக்கு, காலை 7:45 மணி மற்றும், மதியம் 1:35 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில், வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். கொரோனா ஊரடங்கால், இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்கு பின், சென்ட்ரலில் இருந்து நெல்லுாருக்கு, மாலை 4:30 மணிக்கு நெல்லுாருக்கு, எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. வழியில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, தடா, சூலுார்பேட்டை, நாயுடுபேட்டை நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. வழியில் உள்ள மற்ற நிலையங்களில் நிற்காததால், பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து, இப்பாதையில் உள்ள நகரங்களுக்கு போதிய பேருந்து வசதியும் இல்லை. இதனால், சென்ட்ரலில் இருந்து நெல்லுாருக்கு இயக்கப்படும் ரயிலில் பயணியர் கூட்டம் அதிகம் உள்ளது. இந்த ரயிலில் பயணிக்க மாலை 4:30 மணி வரை காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, சென்ட்ரலில் இருந்து, தினமும், காலை 7:45 மணிக்கும், மதியம் 1:35 மணிக்கும் நெல்லுாருக்கு இயக்கப்பட்ட மின்சார ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, ஏரியா பயணியர் சார்பில், தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X