பொது செய்தி

தமிழ்நாடு

10ல் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

Updated : அக் 07, 2021 | Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை :''தமிழகத்தில், 5வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம், 30 ஆயிரம் இடங்களில் 10ம் தேதி நடைபெறும். ''இந்த மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.டெங்கு
 10ல் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

சென்னை :''தமிழகத்தில், 5வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம், 30 ஆயிரம் இடங்களில் 10ம் தேதி நடைபெறும். ''இந்த மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் தாக்கம் தலைதுாக்கி வருகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையும், குளோபல் மருத்துவமனையும் இணைந்து, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதுவரை, நான்கு குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.நிமோனியா, மூளை காய்ச்சல் போன்ற நோய்களை தடுப்பதற்காக, 'நியூமோகாக்கல் கான்ஜிகேட்' என்ற தடுப்பூசி, மாநிலம் முழுதும் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 288 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட சிறார்கள், தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். நர்ஸ்கள், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களின் சிறப்பான பங்களிப்பால் தான், கொரோனா தொற்று குறைந்துள்ளது. வரும், 10ம் தேதி ஐந்தாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.அன்று 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்த மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலக்கை அடைவோம்.போராட்டம் நடத்திய நர்ஸ்கள், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்தான் பணியில் சேர்ந்தனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 15 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர். இதில், 4,800 நர்ஸ்களை நியமிக்க, மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.காசநோய் உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X