சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை கொன்ற கணவர் சிக்கினார்

Added : அக் 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்து தலைமறைவான கணவரை, தனிப்படை போலீசார் தேனியில் பிடித்தனர்.தேனி மாவட்டம், போடிநாயக்கனுாரை சேர்ந்தவர் அருண்குமார், 23; பனியன் தொழிலாளி. கடந்த, ஒன்றரை ஆண்டுக்கு முன், போயம்பாளையம், பழனிசாமி நகரை சேர்ந்த வைஷ்ணவி, 19 என்பவரை காதலித்து திருமணம் செய்தனர். தம்பதியருக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது.கடந்த ஒரு வாரம்

திருப்பூர்:மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்து தலைமறைவான கணவரை, தனிப்படை போலீசார் தேனியில் பிடித்தனர்.தேனி மாவட்டம், போடிநாயக்கனுாரை சேர்ந்தவர் அருண்குமார், 23; பனியன் தொழிலாளி. கடந்த, ஒன்றரை ஆண்டுக்கு முன், போயம்பாளையம், பழனிசாமி நகரை சேர்ந்த வைஷ்ணவி, 19 என்பவரை காதலித்து திருமணம் செய்தனர். தம்பதியருக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது.கடந்த ஒரு வாரம் முன், பாண்டியன் நகர் பண்ணாரியம்மன் நகரில் தம்பதியர் வீடு பார்த்து தனிக்குடித்தனம் சென்றனர். கடந்த, 3ம் தேதி அருண்குமார் வெளியே சென்ற நிலையில், வீட்டுக்குள் வைஷ்ணவி இறந்து கிடந்தார்.சடலத்தை கைப்பற்றி திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்தனர். குடும்ப பிரச்னை தொடர்பாக தம்பதியருக்குள் ஏற்பட்ட தகராறில், மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய் தது தெரிந்தது.தனிப்படை அமைக்கப்பட்டு, கோவை, தேனியில் முகாமிட்டு தலைமறைவான அருண்குமாரை போலீசார் தேடி வந்தனர். ரகசிய தகவலின் பேரில், தேனியில் பதுங்கியிருந்த அருண்குமாரை நேற்று தனிப்படை போலீசார் பிடித்தனர்.அவரை திருப்பூருக்கு அழைத்து கொண்டு வருகின்றனர். 'விசாரணைக்கு பின், கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும், என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X