சில வரி செய்திகள் - திருவள்ளூர்

Added : அக் 05, 2021
Share
Advertisement
வள்ளலார் பிறந்த நாள் திருத்தணி: மத்துார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், திருவருட் பிரகாச வள்ளலாரின், 199வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.இதையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு, வள்ளலார் சத்திய ஞானச்சபை, அன்னதான அறக்கட்டளை சார்பில், சங்க செயலர் பரந்தாமன், மலர் மாலை அணிவித்தார்.பின், பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில்,

வள்ளலார் பிறந்த நாள்

திருத்தணி: மத்துார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், திருவருட் பிரகாச வள்ளலாரின், 199வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு, வள்ளலார் சத்திய ஞானச்சபை, அன்னதான அறக்கட்டளை சார்பில், சங்க செயலர் பரந்தாமன், மலர் மாலை அணிவித்தார்.பின், பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பாலாபிஷேகம்

திருத்தணி: மத்துார், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று செவ்வாய்கிழமை என்பதால், மூலவருக்கு காலை 8:00 மணிக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 3:00- மணி முதல், 4:30 மணி வரை ராகு கால பூஜையும் நடந்தது. அப்போது திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

இதே போல், நகரி, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் கோவிலிலும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. காலை முதல் மாலை வரை, தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பஸ் இயக்க மனு

திருத்தணி: திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, பொதட்டூர்பேட்டை - திருத்தணி வழியாக, சென்னை கோயம்பேடு, திருத்தணி - நகரி, புண்ணியம், பொதட்டூர் பேட்டை வழியாக, பள்ளிப்பட்டு, சென்னை கோயம்பேடு - வெளியகரம் - நகரி வழியாக, பள்ளிப்பட்டு வரை மற்றும் திருத்தணி - பள்ளிப்பட்டு ஆகிய இடங்களுக்கு சென்றுக் கொண்டிருந்த அரசு பஸ்கள் சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன.இந்த பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கையை அப்பகுதி மக்கள் நேற்று, திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

மனுவை பெற்ற எம்.எல்.ஏ., சந்திரன், போக்குவரத்து துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, நிறுத்தப்பட்ட பஸ்கள் இயக்கப்படும் என, உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X