சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹிந்து முன்னணி நிர்வாகி தாக்குதல்; இருவர் கைது

Added : அக் 06, 2021
Share
Advertisement
பல்லடம்:ஹிந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், இருவரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.பல்லடம் அருகே கரைப்புதுார் லட்சுமி நகரை சேர்ந்தவர் சிவகுருநாதன், 32; ஹிந்து முன்னணி ஒன்றிய பொறுப்பாளர். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வந்த சிலர், அவரை தாக்கியதில், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, இருவரை பல்லடம் போலீசார்

பல்லடம்:ஹிந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், இருவரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.பல்லடம் அருகே கரைப்புதுார் லட்சுமி நகரை சேர்ந்தவர் சிவகுருநாதன், 32; ஹிந்து முன்னணி ஒன்றிய பொறுப்பாளர். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வந்த சிலர், அவரை தாக்கியதில், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, இருவரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'சேடபாளையத்தை சேர்ந்த காளிசாமி, 30 சின்னக்கரையைச் சேர்ந்த தமிழ், 29 அருள்புரத்தை சேர்ந்த விக்கி மற்றும் அறிவொளி நகரை சேர்ந்த அரவிந்த் ஆகிய நான்கு பேரும் மது அருந்தினர். இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, நான்கு பேரும் சிவகுருநாதன் வீட்டுக்கு சென்றனர்.அவரை அரிவாளால் தாக்கினர். இது தொடர்பாக, காளிச்சாமி, மற்றும் தமிழ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான விக்கி மற்றும் அரவிந்த் ஆகியோரை தேடி வருகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X