பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதலை அதிகரிக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை

Added : அக் 06, 2021
Share
Advertisement
சென்னை:'நெல் கொள்முதலை அரசு அதிகரிக்க வேண்டும்' என, டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.டெல்டா மாவட்டங்களில் 4.50 லட்சம் ஏக்கரில், குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அறுவடை நடந்து வருகிறது. விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்கான பணிகளை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் துவக்கி உள்ளனர். மத்திய அரசின் உத்தரவுப்படி 17 சதவீதம்

சென்னை:'நெல் கொள்முதலை அரசு அதிகரிக்க வேண்டும்' என, டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் 4.50 லட்சம் ஏக்கரில், குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அறுவடை நடந்து வருகிறது. விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்கான பணிகளை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் துவக்கி உள்ளனர். மத்திய அரசின் உத்தரவுப்படி 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், நெல்லின் ஈரப்பதம் 20 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.ஈரப்பதத்தை காரணம் காட்டி, அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்படாததால், பல இடங்களில் மழையில் கொட்டி வைக்கப்பட்டுஉள்ளன.

எனவே, 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து, தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

வட மாநிலங்களில் தற்போது கோடைக் காலம். இதை அடிப்படையாக வைத்தே, 17 சதவீத ஈரப்பத நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் மழைக் காலம் என்பதால், இது பொருந்தாது. அதேநேரத்தில், 22 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே முளைக்கும். எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை, தமிழக அரசு கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இதற்காக, மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். உடனடியாக அனுமதி கிடைக்கா விட்டாலும், கொள்முதல் செய்தபின் அனுமதி பெற, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு கொள்முதல் செய்யாத பட்சத்தில், விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் முழுதும், நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு செல்லாமல், வங்கக்கடலுக்கு தான் செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X