சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.14.65 லட்சம் மோசடி: கட்டுமான உரிமையாளர் கைது

Added : அக் 06, 2021
Share
Advertisement
அவிநாசி:வங்கிக்கடன் பெற்று, வீடு கட்டி தருவதாக கூறி, 14.65 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர், மாரியம்மன் கோவில், கோகுலம் காலனியைச் சேர்ந்த மணிகண்டன், 37, என்பவர், அவிநாசி போலீசில் அளித்த புகார் மனு:கடந்த, 2019ல், அவிநாசி அருகே அய்யம்பாளையம் கிராமத்தில், 'திருமுருகன் நகர்' என்ற பெயரில் பல்லடம்

அவிநாசி:வங்கிக்கடன் பெற்று, வீடு கட்டி தருவதாக கூறி, 14.65 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர், மாரியம்மன் கோவில், கோகுலம் காலனியைச் சேர்ந்த மணிகண்டன், 37, என்பவர், அவிநாசி போலீசில் அளித்த புகார் மனு:கடந்த, 2019ல், அவிநாசி அருகே அய்யம்பாளையம் கிராமத்தில், 'திருமுருகன் நகர்' என்ற பெயரில் பல்லடம் டி.என்.டி., நகரில் வசிக்கும் முத்துக்குமார், 35 என்பவர், வங்கிக்கடன் பெற்று, வீடு கட்டி தருவதாக விளம்பரம் செய்தார். அதனை நம்பி, வீடு கட்டி தருவதற்கு, முன்பணமாக, 1.85 லட்சம் ரூபாய் கொடுத்து, ரசீது பெற்றேன். ஒரு வருடமாகியும், முத்துக்குமார் வீடு கட்டி கொடுக்காமல், காலம் தாழ்த்தி வந்தார்.கடந்தாண்டு மார்ச் மாதம், அவரது அலுவலகம் திடீரென பூட்டப்பட்டது. அவரது போனும் 'சுவிட்ச் ஆப்' ஆனது. என்னை போன்றே, 15 பேரிடம் இருந்து, மொத்தம், 14.65 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று ஏமாற்றியுள்ளார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.விசாரணை மேற்கொண்ட அவிநாசி போலீசார், முத்துக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X