மருத்துவ கல்வி ஒழுங்குமுறையும் வர்த்தகமாகிவிட்டது: சுப்ரீம் கோர்ட்

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுடில்லி:'நாட்டில் மருத்துவ கல்வி மட்டுமின்றி, மருத்துவ கல்வி ஒழுங்குமுறையும் வர்த்தக மயமாகிவிட்டது' என, உச்ச நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.மனு தாக்கல்இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை போலவே, 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான நீட் - எஸ்.எஸ்.,

புதுடில்லி:'நாட்டில் மருத்துவ கல்வி மட்டுமின்றி, மருத்துவ கல்வி ஒழுங்குமுறையும் வர்த்தக மயமாகிவிட்டது' என, உச்ச நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.


மனு தாக்கல்

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை போலவே, 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான நீட் - எஸ்.எஸ்., நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு வாரியம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

நடப்பாண்டுக்கான நீட் - எஸ்.எஸ்., நுழைவுத் தேர்வு, நவ., 13,- 14ஆம் தேதிகளில் நடத்தப்படும் என ஜூலையில் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப் பட்டு அதற்கான அறிவிப்பு ஆகஸ்டில் வெளியானது.'தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்வுக்கு இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வது சட்ட விரோதம்' என கூறி, ௪௧ முதுநிலை டாக்டர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்த வழக்கு விசாரணை கடந்த முறை நடந்த போது 'புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தயாராவதற்காக ஜன., 10,11ம் தேதிகளில் நீட் எஸ்.எஸ்., தேர்வு நடத்தப்படும்' என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


ஒழுங்குமுறை



இந்த வழக்கு, நீதிபதிகள் சந்திரசூட், விக்ரம் நாத், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: நீட் -எஸ்.எஸ்., தேர்வு தேதியை மாற்றிக் கொண்டே இருப்பது மருத்துவக் கல்வி தரத்திற்கு உகந்த செயல் அல்ல. நவம்பரில் நடக்க வேண்டிய தேர்வுக்கு, ஆகஸ்டில் பாடத் திட்டம் மாற்றம் செய்யப்படுகிறது.

மாணவர்கள் மனு தாக்கல் செய்தவுடன், ஜனவரி மாதத்துக்கு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. நாட்டில் மருத்துவ கல்வி தான் முழுமையாக வணிக மயமாகிவிட்டது என்றால், மருத்துவக் கல்வியின் ஒழுங்குமுறையும் வணிக மயமாகிவிட்டன.மருத்துவக் கல்லுாரி களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்களை நிரப்பவே அவசரம் காட்டப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X