ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை கலெக்டரிடம் ஒப்படைக்க முடிவு| Dinamalar

ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை கலெக்டரிடம் ஒப்படைக்க முடிவு

Added : அக் 06, 2021
Share
திருத்தணி : பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு போராடியும் நடவடிக்கை இல்லாததால், வரும், 11ம் தேதி கலெக்டரிடம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைக்க, சலவை தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருத்தணி சலவை தொழிலாளர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் நதியா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் வரவு - செலவு கணக்குகள் சரி பார்க்கப்பட்டன.பின்,

திருத்தணி : பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு போராடியும் நடவடிக்கை இல்லாததால், வரும், 11ம் தேதி கலெக்டரிடம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைக்க, சலவை தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருத்தணி சலவை தொழிலாளர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் நதியா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் வரவு - செலவு கணக்குகள் சரி பார்க்கப்பட்டன.பின், சலவை துறைக்கு மட்டும் ஏற்படுத்திய ஆழ்துளை கிணறு தண்ணீர் சலவை தொழிலாளர்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.சலவை தொழிலாளர்கள், இதர சமுதாயத்தினர் என, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சொந்த வீடுகள் இல்லாததால்,

இலவச வீட்டுமனை பட்டா வழங்கும்படி, வருவாய் துறையினரிடம் பல ஆண்டுகளாக கேட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை, இம்மாதம், 11ம் தேதி, அனைவரும் தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை, கலெக்டரிடம் திரும்பி ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சலவை துறை ஏற்படுத்தியதால், சுற்றுச்சுவர், கம்பிவலை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்துவது உட்பட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X