பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பாக பணியாற்றும் டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை?

Added : அக் 06, 2021
Share
Advertisement
சென்னை:அரசு டாக்டர்கள், ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.இந்நிலையில், அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வுக்கு பதிலாக, ஊக்கத்தொகை வழங்கலாம் என, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.மக்கள் நல்வாழ்வுத் துறை உயர் அதிகாரி கூறியதாவது:அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பெரும்பாலான டாக்டர்கள், சிறப்பான

சென்னை:அரசு டாக்டர்கள், ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வுக்கு பதிலாக, ஊக்கத்தொகை வழங்கலாம் என, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.மக்கள் நல்வாழ்வுத் துறை உயர் அதிகாரி கூறியதாவது:அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பெரும்பாலான டாக்டர்கள், சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர்.

அதே வேளையில் சில டாக்டர்கள், பணி நேரத்தில் கூட, தங்களது கிளீனிக் அல்லது தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர்.குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையங்களில், இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அங்கு பெரும்பாலும், நர்ஸ்கள் தான் சிகிச்சை அளிக்கின்றனர். டாக்டர்கள் 2, 3 மணி நேரம் வரை மட்டுமே பணியாற்றுகின்றனர்.

இதே நிலை தான், மாவட்ட தலைமை மருத்துவமனைகள மற்றும் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும் தொடர்கிறது.டாக்டர்களின் கோரிக்கையை ஏற்று, அனைவருக்கும் ஊதிய உயர்வு அளித்தால், சிறப்பாக, தனித்துவமாக பணியாற்றும் டாக்டர்களை பாதிக்கும். எனவே, சிறப்பாக, தனித்துவமாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அரசு பரிசீலித்து வருகிறது.

அதேவேளையில், டாக்டர்களின் காலமுறை ஊதிய உயர்வு கோரிக்கையும் பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X