அரசியல் செய்தி

தமிழ்நாடு

இல்லத்தை புனரமைக்க அரசு உதவும்'

Added : அக் 06, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வள்ளலாரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ஏழுகிணற்றில் அவர் வசித்த வீட்டிற்கு சென்று, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மரியாதை செலுத்தினார். பின் அவர் அளித்த பேட்டி:சென்னை ஏழுகிணறு பகுதியில், 55 ஆண்டு காலம் வாழ்ந்த வள்ளலார், இந்த இல்லத்தில், 33 ஆண்டுகள் வசித்துள்ளார். அவர் அவதரித்த இந்த நாளில், அவர் வாழ்ந்த இல்லம் வந்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.பசி
 இல்லத்தை புனரமைக்க அரசு உதவும்'

வள்ளலாரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ஏழுகிணற்றில் அவர் வசித்த வீட்டிற்கு சென்று, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மரியாதை செலுத்தினார்.

பின் அவர் அளித்த பேட்டி:சென்னை ஏழுகிணறு பகுதியில், 55 ஆண்டு காலம் வாழ்ந்த வள்ளலார், இந்த இல்லத்தில், 33 ஆண்டுகள் வசித்துள்ளார். அவர் அவதரித்த இந்த நாளில், அவர் வாழ்ந்த இல்லம் வந்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

பசி என்பதே நாட்டில் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற, அவரின் சேவைகளை பெருமைப் படுத்தும் விதமாக, வடலுாரில், 72 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் விரைவில் கட்டப்படும். சென்னையில் அவர் வசித்த இல்லத்தை புனரமைக்க அரசு உதவி செய்யும்.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, கோவில்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாடு ஆண்டு முழுதும் தொடராது. கொரோனா பாதிப்பு நீங்கி இயல்பு நிலைக்கு வந்ததும், அனைத்து நாட்களும் கோவில்களுக்கு சென்று, பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
06-அக்-202120:15:55 IST Report Abuse
தமிழ்வேள் மாட்டுக்கறி பிரியாணி கோஷ்டிகள், எல்லாம் வள்ளலாரைப் பற்றி பேசுவதென்பது, காலத்தின் அலங்கோலம் .. நித்திய ஹிம்சை விரும்பிகளான இவர்களுக்கு வள்ளலாரை பற்றியோ , சுத்த சமரச சத்திய சன்மார்க்கத்தை பற்றியோ பேசுவதற்கு அருகதை இல்லை ...
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
06-அக்-202119:45:30 IST Report Abuse
venkates நம்மை அடிமையாக்கிய முகலாய முஸ்லீம் அரசர்கள் மற்றும் கிரிஷ்டாவ ஆங்கிலேயர்களை விட ,திமுக அரசு தமிழர்களை மட்டுமே அடக்குமுறை,கோயில்வரி,உண்டியலவசூல் ,கோயில் அழுமைசெய்து மொட்டை அடிக்கிறது, தமிழன் நல்ல அடிமை டிராவிடனுக்கு?
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-அக்-202117:31:51 IST Report Abuse
மலரின் மகள் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X