அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவரை ஏமாற்ற வேண்டாம்: எம்.எல்.ஏ., வானதி 'காட்டம்'

Added : அக் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்,:''நீட் தேர்வு விவகாரத்தில் மக்களையும், மாணவர்களையும் தி.மு.க., ஏமாற்ற வேண்டாம்,'' என, பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார். திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பிரதமர் மோடியின் 20 ஆண்டு மக்கள் பணியை பெருமைப்படுத்தும் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பங்கேற்ற கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறியதாவது:உ.பி., வன்முறை
 மாணவரை ஏமாற்ற வேண்டாம்: எம்.எல்.ஏ., வானதி 'காட்டம்'

திருப்பூர்,:''நீட் தேர்வு விவகாரத்தில் மக்களையும், மாணவர்களையும் தி.மு.க., ஏமாற்ற வேண்டாம்,'' என, பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார். திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பிரதமர் மோடியின் 20 ஆண்டு மக்கள் பணியை பெருமைப்படுத்தும் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், பங்கேற்ற கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறியதாவது:உ.பி., வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என, முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துஉள்ளார். வேளாண் திருத்த சட்டத்தில், காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. காங்., ஆட்சி செய்த காலத்தில் தான், வேளாண் சட்டங்களுக்கான அடிப்படை தரவுகள் சேகரிக்கப்பட்டு, சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என பரிந்துரைத்தது.

தற்போது, சட்டத்தை கொண்டு வந்த பின், எதிர்க்கின்றனர். 'நீட்' தேர்வு சுப்ரீம் கோர்ட்டால் அங்கீகரிக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக நடந்து வருகிறது.மாணவர்களை ஏமாற்றாமல், யதார்த்தத்தை மக்களிடம் தி.மு.க., சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X