லக்கிம்பூர் வன்முறை விவகாரம் பிரியங்கா மீது எப்.ஐ.ஆர்., பதிவு

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சீதாபுர்:பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா உட்பட 11 பேர் மீது, தடுப்பு காவல் சட்டப் பிரிவுகளின் கீழ், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள லக்கிம்பூரில் சமீபத்தில் நடந்த வன்முறையில் நான்கு
 லக்கிம்பூர் வன்முறை விவகாரம் பிரியங்கா மீது எப்.ஐ.ஆர்., பதிவு

சீதாபுர்:பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா உட்பட 11 பேர் மீது, தடுப்பு காவல் சட்டப் பிரிவுகளின் கீழ், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள லக்கிம்பூரில் சமீபத்தில் நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.நடவடிக்கைபாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தாரை சந்திக்க சென்ற பிரியங்கா உள்ளிட்டோர், சீதாபுர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர்.

எந்த வழக்கும் பதிவு செய்யாமல் தொடர்ந்து காவலில் வைத்துள்ளது குறித்து, பிரியங்கா சமூக வலை தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். காங்., மூத்த தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்பு காவல் சட்டப் பிரிவுகளின் கீழ் பிரியங்கா, மூத்த தலைவர்கள் திபேந்திர ஹூடா, அஜய் குமார் லல்லு உட்பட 11 பேர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு உள்ளது.

''பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தமாட்டோம் என அவர்கள் உறுதி அளித்தால், இந்த சட்டப் பிரிவுகள் நீக்கப்படும்,'' என, துணை கலெக்டர் பியாரே லால் மவுரியா கூறியுள்ளார். முன்னதாக, பிரியங்காவை இன்று காலைக்குள் விடுவிக்காவிட்டால், லக்கிம்பூருக்கு பேரணி நடத்தப்போவதாக, காங்., பஞ்சாப் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறியிருந்தார்.

பிரியங்காவை சந்திக்க வந்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், லக்னோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து அவர் அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.


செய்தியாளரும் பலி



லக்கிம்பூரில் 2ம் தேதி நடந்த வன்முறையில், தனியார் 'டிவி' செய்தியாளர் ராமன் காஷ்யப், 28, வன்முறையில் சிக்கி பரிதாபமாக பலியாகி உள்ளார். செய்தியாளர் காஷ்யபுக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவிக்கு அரசு வேலை மற்றும் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, விவசாயிகள் மீது காரை மோதியது தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
06-அக்-202119:15:52 IST Report Abuse
RajanRajan தேச அமைதிக்கு பங்கம் விளைவித்து அந்நிய கைக்கூலிகளாய் செயல்படும் எதிர்க்கட்சிகள் அடையாளம் காணப்பட்டு வேரறுக்க பட வேண்டும். பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பதை தவிர்த்து அரசியல் ஆதாயம் தேடுவதே இவர்களின் பொழைப்பாகி போச்சு. மக்கள் ஒருக்காலும் இந்த கைக்கூலிகளை ஒழிப்பதில் இருந்து ஒய்வு பெற கூடாது. ஜெய் ஸ்ரீராம்.வந்தே மாதரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X