வள்ளௐலார் பிறந்த நாள் தனிப்பெருங்கருணை நாளாக அறிவிப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வள்ளௐலார் பிறந்த நாள் தனிப்பெருங்கருணை நாளாக அறிவிப்பு

Added : அக் 06, 2021 | கருத்துகள் (2)
Share
சென்னை:'அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளான, அக்டோபர், 5ம் தேதி, இனி ஆண்டுதோறும், தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்' என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள மருதுாரில், 1823 அக்., 5ல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு

சென்னை:'அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளான, அக்டோபர், 5ம் தேதி, இனி ஆண்டுதோறும், தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்' என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள மருதுாரில், 1823 அக்., 5ல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்தார்.

'அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே' என்பதை குறிக்கும் வகையில், இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். வடலுாரில் சத்தியஞான சபையை எழுப்பினார். 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடினார். மக்களின் பசித்துயர் போக்க, சத்திய தர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம், பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் போன்ற உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு, 'திருவருட்பா' என்று அழைக்கப்படுகிறது.இது, ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது.திருவருட்பா ஆறாம் திருமுறையில், 'எந்த சமயத்தின் நிலைப்பாட்டையும், எல்லா மதநெறிகளையும், சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன்' என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமச் சாலைகளையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார். பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார்.

அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி, இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது.அவர் பிறந்த நாளான அக்., 5 இனி ஆண்டுதோறும், 'தனிப்பெருங்கருணை நாள்' என கடைப்பிடிக்கப்படும்.இவ்வாறு ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X