தரமணி - டைடல் பூங்கா இடையே புதிய மெட்ரோ பணிகள் துரிதம்| Dinamalar

தமிழ்நாடு

தரமணி - டைடல் பூங்கா இடையே புதிய மெட்ரோ பணிகள் துரிதம்

Added : அக் 06, 2021
Share
சென்னை : புதிய மெட்ரோ பாதை அமைக்க, தரமணி - டைடல் பூங்கா இடையே, ஆரம்ப கட்ட பணிகள் நடக்கின்றன.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட், மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையேயான, மெட்ரோ ரயில்
 தரமணி - டைடல் பூங்கா இடையே புதிய மெட்ரோ பணிகள் துரிதம்


சென்னை : புதிய மெட்ரோ பாதை அமைக்க, தரமணி - டைடல் பூங்கா இடையே, ஆரம்ப கட்ட பணிகள் நடக்கின்றன.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட், மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையேயான, மெட்ரோ ரயில் பாதைகள், சோழிங்கநல்லுாரில் இணைகின்றன.

இப்பாதை பணிகளுக்கான ஆரம்ப கட்ட பணிகளை துவக்கி இருப்பதால், பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில், செப்டம்பரில் இருந்து, சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.மாதவரம் - சிறுசேரி சிப்காட் மெட்ரோ பாதையில், மாதவரம் - தரமணி இணைப்பு சாலை வரை, திட்ட பணிகளை விரைவாக முடிப்பதற்காக, பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு, ஆரம்பகட்ட பணிகள் துரிதமடைந்துள்ளன.

இப்பாதையில், திருவான்மியூர் - எஸ்.ஆர்.பி., டூல்ஸ் இடையே, 1.4 கி.மீ., துாரம் சுரங்கப்பாதையாக அமைகிறது. பாதை அமைப்பதற்கு ஏதுவாக சாலையில், தரைக்கு அடியில் உள்ள குடிநீர் குழாய்கள், மழை நீர் வடிகால் குழாய்கள், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகளுக்கான கேபிள்களை அகற்றி, மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக, தேவையான இடங்களில் தற்காலிக இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.டைடல் பார்க்கில் இருந்து தரமணி வரை, சாலையில் தற்காலிக இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக, சுரங்க நிலையம் அமைக்க, பள்ளம் தோண்டப்பட்டு பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டபட்டபின், சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கும்.
- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X