சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர் 'அட்ராசிட்டி' ஓராண்டுக்கு வரி ரத்து

Added : அக் 06, 2021
Share
Advertisement
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் எலப்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவி, ஆதி திராவிடர் பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு 1,200 ஓட்டுகள் உள்ளன.இந்த ஓட்டுகளைக் கவர, மூன்று பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஒரு வேட்பாளர், வெற்றி பெறுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.அதில், 'நான் வெற்றி பெற்றால் அனைவரது வீட்டு வரி, குடிநீர் வரியை ஓராண்டுக்கு கட்ட வேண்டாம்'

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் எலப்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவி, ஆதி திராவிடர் பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இங்கு 1,200 ஓட்டுகள் உள்ளன.இந்த ஓட்டுகளைக் கவர, மூன்று பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஒரு வேட்பாளர், வெற்றி பெறுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.அதில், 'நான் வெற்றி பெற்றால் அனைவரது வீட்டு வரி, குடிநீர் வரியை ஓராண்டுக்கு கட்ட வேண்டாம்' எனக் கூறியுள்ளார்.

குடிநீர் வரியாக ஒரு குடும்பத்திற்கு மாதம் 30 ரூபாய் என, ஆண்டுக்கு 360 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீட்டு வரியாக ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆண்டுக்கு 200 - 300 ரூபாய் வரை செலுத்துகின்றனர்.அதன்படி கணக்கிட்டால், குடிநீர் வரி, வீட்டு வரி இரண்டும் சேர்த்து, ஓராண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய் வரை வருகிறது.ஒரு வேட்பாளர் தன் சொந்தப் பணத்தை இப்படி செலவிட்டால், அவர் 'அள்ளுவது' எவ்வளவு இருக்கும் என, வேட்பாளர்கள் யோசிக்கின்றனர்.தவிர, இது சாத்தியமா அல்லது வெற்றி முனைப்பில் அடித்து விடுகிறாரா என, கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

அதேபோல், மதுராந்தகம் ஒன்றியம், தேவாதுார் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆண் வேட்பாளர் ஒருவர், நான் வெற்றி பெற்றால் இங்குள்ள 200க்கும் மேற்பட்ட இருளர் குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது, புத்தாடை எடுத்து தருவேன் எனக் கூறி ஓட்டு சேகரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X