அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனிப்பிரிவு அலுவலகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு

Added : அக் 06, 2021
Share
Advertisement
சென்னை: சென்னை தலைமை செயலக வளாகத்தில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு அனைத்து அலுவலக நாட்களிலும், பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகின்றன. காலை தலைமை செயலகம் வந்த முதல்வர், தன் பணிகளை முடித்து, பகல் 12:00 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது காரில் ஏறாமல், திடீரென முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் சென்றார்.அவருடன் தலைமை செயலர் இறையன்பு மற்றும் முதல்வரின்

சென்னை: சென்னை தலைமை செயலக வளாகத்தில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு அனைத்து அலுவலக நாட்களிலும், பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகின்றன. காலை தலைமை செயலகம் வந்த முதல்வர், தன் பணிகளை முடித்து, பகல் 12:00 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது காரில் ஏறாமல், திடீரென முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் சென்றார்.

அவருடன் தலைமை செயலர் இறையன்பு மற்றும் முதல்வரின் செயலர்களும் சென்றனர். திடீரென முதல்வர் வந்ததை கண்டதும், அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் எழுந்து நின்றனர். அங்கு மனு கொடுக்க காத்திருந்தோரின் குறைகளை முதல்வர் கேட்டறிந்தார். அவர்களின் மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மனுதாரர்களில் ஒருவர், காணாமல் போன தன் மகனை கண்டுபிடித்து தரும்படி கோரிக்கை வைத்தார். உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களையும் கேட்டறிந்தார்.

'அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மனுதாரர்களுக்கு அவர்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பதில்களை, உடனுக்குடன் அளிக்க வேண்டும்' என்றும் முதல்வர் அறிவுறுத்தினார். பின்னர் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X