அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிலக்கரி தட்டுப்பாடு இல்லை செந்தில் பாலாஜி தகவல்

Added : அக் 06, 2021
Share
Advertisement
கரூர்:''அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை,'' என, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.கரூர், பசுபதிபாளையத்தில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றுக்கு 16 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது. இதில், மின் வாரியத்தின் சொந்த உற்பத்தி 22 சதவீதம். மீதமுள்ளவை, மத்திய அரசின் பங்கீடு மற்றும் தனியாரிடம் கொள்முதல் மூலம் பூர்த்தி செய்து

கரூர்:''அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை,'' என, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
கரூர், பசுபதிபாளையத்தில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றுக்கு 16 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது. இதில், மின் வாரியத்தின் சொந்த உற்பத்தி 22 சதவீதம். மீதமுள்ளவை, மத்திய அரசின் பங்கீடு மற்றும் தனியாரிடம் கொள்முதல் மூலம் பூர்த்தி செய்து வருகிறோம்.

அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்யும் நிலையை மாற்றி, உற்பத்தி செலவை குறைத்து, பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவிக்க உள்ளோம்.மேலும், அந்தந்த மாவட்டங்களிலேயே சூரிய மின்சக்தி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 4,000 மெகா வாட் அளவிற்கு சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களின் உற்பத்தி, 2006 - -2011 தி.மு.க., ஆட்சியில் 85 சதவீதமாக இருந்தது. 2011 - -2016ல், 78 சதவீதம், 2016 - -2021ல் 58 சதவீதமாக குறைந்துஉள்ளது.தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த நடவடிக்கை இருந்து வந்தது.

இந்நிலையை முற்றிலும் மாற்றி, நிர்வாகத்தை சீர்படுத்தி, நம்முடைய உற்பத்தி திறனை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திடம், முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு நிலக்கரி இருப்பு இருக்கிறது. அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. எந்தவித இடையூறும் இன்றி மின் உற்பத்தி நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X