பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறி போனஸ் ஆலோசனை

Added : அக் 06, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள விசைத்தறி கூடங்களின், ஒருங்கிணைப்பாக உள்ள, ஸ்ரீகருணாம்பிகை விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம், அவிநாசியில் நேற்று நடந்தது.கூட்டத்தக்கு சங்க தலைவர் முத்துசாமி, தலைமை வகித்தார். கடந்த, 2014 முதல், தற்போது வரை கூலி உயர்வு வழங்கப்படாதது மற்றும்இந்தாண்டு, தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது குறித்து

அவிநாசி:அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள விசைத்தறி கூடங்களின், ஒருங்கிணைப்பாக உள்ள, ஸ்ரீகருணாம்பிகை விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம், அவிநாசியில் நேற்று நடந்தது.கூட்டத்தக்கு சங்க தலைவர் முத்துசாமி, தலைமை வகித்தார். கடந்த, 2014 முதல், தற்போது வரை கூலி உயர்வு வழங்கப்படாதது மற்றும்இந்தாண்டு, தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூலி உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக கமிட்டி எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தருவது எனவும், தொழிலாளர்களுக்கு, கடந்தாண்டு வழங்கியது போன்று, 13.5 சதவீதம் போனஸ் வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.போனஸ் பேச்சு வரும், 22ல், கோவை தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X