தமிழ்நாடு

வன உயிரின பாதுகாப்பு வாரம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
தாம்பரம் : கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், வண்டலுார் உயிரியல் பூங்காவில், பார்வையாளர்களின் வருகை மெல்ல அதிகரித்துள்ளது. இந்நிலையில், வன உயிரின பாதுகாப்பு வாரத்தையொட்டி, இந்த பூங்காவில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நம் நாட்டில், வன விலங்கு பாதுகாப்பிற்காக, 44 தேசிய பூங்காக்கள், 247 வன விலங்கு சரணாலயங்கள் உள்ளன. இதில், தென்கிழக்கு ஆசியாவில்,
 வன உயிரின பாதுகாப்பு வாரம்

தாம்பரம் : கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், வண்டலுார் உயிரியல் பூங்காவில், பார்வையாளர்களின் வருகை மெல்ல அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வன உயிரின பாதுகாப்பு வாரத்தையொட்டி, இந்த பூங்காவில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நம் நாட்டில், வன விலங்கு பாதுகாப்பிற்காக, 44 தேசிய பூங்காக்கள், 247 வன விலங்கு சரணாலயங்கள் உள்ளன. இதில், தென்கிழக்கு ஆசியாவில், பழமையான மற்றும் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றான, வண்டலுார் உயிரியல் பூங்காவும் ஒன்று.உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தோர், இந்த பூங்காவை சுற்றிப்பார்க்க வருகின்றனர்.

மகிழச்சி
கொரோனா தொற்றால், மூடப்பட்டிருந்த இந்த பூங்கா, தற்போது, மீண்டும் திறக்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பி வரும் நிலையில், தினசரி, பார்வையாளர் வருகை மெல்ல அதிகரித்து வருகிறது. தற்போது, நாளொன்றுக்கு, 1,000 முதல் 2 ஆயிரம் பேர் வரையிலும், வார இறுதி நாட்களில், 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரையிலும் இப்பூங்காவிற்கு வருகின்றனர். வன உயிரின பாதுகாப்பு வாரத்தையொட்டி, வண்டலுார் உயிரியல் பூங்காவில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பூங்காவில் பராமரிக்கப்படும் பல்வேறு அரிய வகை விலங்குகள் தத்தமது குட்டிகளுடன் ஜாலியாக உலா வருகின்றன. பல மாதங்களாக கொரோனா ஊரடங்கால், வீடுகளில் முடங்கி கிடந்த பொதுமக்கள், தற்போது பூங்காவில் உள்ள விலங்கினங்களை கண்டு ரசித்து மகிழ்ச்சி அடைகின்றனர். பூங்காவில் பராமரிக்கப்படும் அரிய வகை மான் இனங்களில் சருகு மானும் ஒன்று. கேரளாவில், 'கூரான்பன்னி' என அழைக்கப்படும், இந்த வகை மான்கள், 25 முதல் 30 செ.மீ., உயரமும்; 4 கிலோ எடை வரை வளரும் தன்மை கொண்டவை.இலையுதிர், பசுமை மாறா காடுகளில் வளரக்கூடிய இவை, வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஐந்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன.

இதில் ஒரு மான், சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. ரம்மியம்அவற்றை பார்க்க, பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு, பிரத்யேகமாக கூண்டுகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதேபோல், நீர் யானை ஒன்றும் புதிதாக குட்டி ஈன்றுள்ளது.இதே போல், சில மாதங்களுக்கு முன், குட்டி ஈன்ற, 'சிம்பன்சி' எனப்படும், மனித குரங்கும் தன் குட்டியை, வயிற்றில் சுமந்தபடி ஜாலியாக, வலம் வருவதும், ஒட்டகச்சிவிங்கி, சிங்கம், புலி, காட்டுக்கழுதை உட்பட முக்கிய விலங்குகளின் வாழ்விடங்களில், குடில்கள் அமைக்கப்பட்டு, ரம்மியமாக காட்சி தருவதும், பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.தற்போது, வன உயிரின வார விழாவை கொண்டாடும் நிலையில், பூங்கா நிர்வாகம் சார்பில்,வனப் பாதுகாப்பு சட்டங்கள், காலநிலை மாற்றம், காடுகளை வேட்டையாடுதலால் ஏற்படும் வறட்சி, பிளாஸ்டிக் பயன்பாடு, ஆக்கிரமிப்பு போன்றவை குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவை, அடுத்தடுத்த நாட்களில் நடைபெற உள்ளதாகவும், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பலரும், இதில் பங்கேற்று பலன் அடையலாம் என, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X