பொது செய்தி

தமிழ்நாடு

சின்னம் படுத்தும்பாடு

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஒன்றியத்தில் இரண்டாம் கட்டமாக அக்., 9ல் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆட்டோ, பூட்டு சாவி, மூக்கு கண்ணாடி, ஏணி, கத்தரிக்காய், கை உருளை உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.இவர்கள், தங்கள் சின்னத்தை மக்கள் மத்தியில் பதிய வைக்க, பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்.கத்தரிக்காய் சின்னம்
 சின்னம் படுத்தும்பாடு


ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஒன்றியத்தில் இரண்டாம் கட்டமாக அக்., 9ல் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆட்டோ, பூட்டு சாவி, மூக்கு கண்ணாடி, ஏணி, கத்தரிக்காய், கை உருளை உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

இவர்கள், தங்கள் சின்னத்தை மக்கள் மத்தியில் பதிய வைக்க, பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்.கத்தரிக்காய் சின்னம் கிடைத்தவர், மூட்டை மூட்டையாக கத்தரிக்காயை வாங்கி, பொதுமக்களுக்கு கிலோ கணக்கில் கொடுத்து வருகிறார். தேர்தலுக்குள் குடும்ப பெண்களின் ஓட்டுகளை கவர, இவ்வாறு அவர் செய்து வருகிறார்.அந்த வரிசையில், பூட்டுசாவி சின்னம் கிடைத்த வேட்பாளர்கள், எம்.ஜி.ஆர்., நடித்த ஆனந்தஜோதி திரைப்படத்தில் வரும் 'பல பல பல ரகமா இருக்குது பூட்டு' என்ற பழைய பாடலை ஒலிக்கவிட்டு, பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த பாடலில் எம்.ஜி.ஆர்., பூட்டு சாவி விற்பதை போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 'இப்பாடல், பெரியோரை வேண்டுமானால் கவரும், நடு வயது, இள வயது வாக்காளர்களுக்கு, அப்படிப்பட்ட பாடல் இருப்பதே தெரியாது என்பதால், அவர்களை கவருவது சந்தேகம் தான்' என ஆதரவாளர்கள் கூறி வருவதால், அந்த வேட்பாளர்கள் கவலையில் உள்ளனர்.இந்த பாடல் கவராததால் 'பூட்டுக்கு ஏற்ற சாவி'க்கு எங்கு போவேன் என, அவர்கள் யோசனையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X