சேதமடைந்த தடுப்பணையால் வீணாகுது மழை நீர்: 5 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை வேடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த தடுப்பணையால் வீணாகுது மழை நீர்: 5 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை வேடிக்கை

Added : அக் 06, 2021
Share
சூலுார்:சேதமடைந்த செங்கத்துறை தடுப்பணையை, புனரமைக்காததால், ஐந்து ஆண்டுகளாக மழை நீர் தேங்காமல் வீணாக வெளியேறுகிறது என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சூலுார் செங்கத்துறை ரோட்டில், 15 ஏக்கர் பரப்புள்ள செங்கத்துறை தடுப்பணை உள்ளது. சுமார், 70 அடி நீளம் தடுப்புச் சுவர் கொண்ட அணையில் தேங்கி வந்த நீரால், காடாம்பாடி, செங்கத்துறை, குமாரபாளையம், தேவராயம்பாளையம் உள்ளிட்ட
 சேதமடைந்த தடுப்பணையால் வீணாகுது மழை நீர்: 5 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை வேடிக்கை

சூலுார்:சேதமடைந்த செங்கத்துறை தடுப்பணையை, புனரமைக்காததால், ஐந்து ஆண்டுகளாக மழை நீர் தேங்காமல் வீணாக வெளியேறுகிறது என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சூலுார் செங்கத்துறை ரோட்டில், 15 ஏக்கர் பரப்புள்ள செங்கத்துறை தடுப்பணை உள்ளது. சுமார், 70 அடி நீளம் தடுப்புச் சுவர் கொண்ட அணையில் தேங்கி வந்த நீரால், காடாம்பாடி, செங்கத்துறை, குமாரபாளையம், தேவராயம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயத்துக்கு பேருதவியாக இருந்தது.திருச்சி ரோட்டின் தெற்கு பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிந்து, இத்தடுப்பணைக்கு நீர் வரும்.கடந்த, 2017ல் பெய்த கனமழையால், தடுப்பணை நிரம்பி வழிந்தது.

இரு மாதங்களிலேயே தடுப்பணை உடைந்து, தேங்கியிருந்த நீர் முழுவதும் வெளியேறியது.அன்று முதல், இன்று வரை, சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படவில்லை. பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல அரசு துறை அதிகாரிகளிடம், மனுக்களை கொடுத்தும் பயனில்லை.கடைசியாக, அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம் நேரடியாக மனு அளிக்கப்பட்டது. அதன் பயனாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ரூ.1.47 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்ட, திட்ட மதிப்பீடு தயாரித்தனர்.இன்னும் கட்டப்படவில்லை.
இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:தடுப்பணை உடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. அன்று முதல் மழைநீர் கொஞ்சமும் தேங்குவதில்லை. சுற்றுவட்டாரத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. புதிய அரசு அமைந்த பின்னரும் மனுக்களை கொடுத்துள்ளோம். பருவ மழை தீவிரமடைவதற்கு முன்பாக தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால், விவசாயிகளைத் திரட்டி போராடுவதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.நொய்யல் திட்டத்தில் விடுபட்டதுபொதுப்பணித்துறை சார்பில், கடந்த ஆண்டில், நொய்யல் ஆற்றில் உள்ள தடுப்பணைகள், கரைகள் புனரமைக்கப்பட்டன. நொய்யல் ஆற்று நீர் செல்லும் குளங்களின் கரைகளில், பல கோடி செலவில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. கரைகளில் கற்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், நொய்யல் ஆற்றை ஒட்டி உள்ள, செங்கத்துறை தடுப்பணையை சீரமைக்காமல் விட்டு விட்டனர். இது, விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X