பொது செய்தி

தமிழ்நாடு

குற்றச் செயல்களைத் தவிர்க்க பாலத்தில் கண்காணிப்பு கேமரா

Added : அக் 06, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் பாலம் அருகில், சமூகவிரோத செயல்கள் நடப்பதை தடுக்க, அப்பகுதியில், போலீசார், கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.நாயக்கன்பாளையத்தில் இருந்து கோவனுார் செல்லும் வழியில், பாலம் உள்ளது.கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாலத்துக்கு அடியில், முகம் மற்றும் கை, கால்கள் தீயில் கருகிய நிலையில், 35 வயது மதிக்கத்தக்க நபர்
 குற்றச் செயல்களைத் தவிர்க்க பாலத்தில் கண்காணிப்பு கேமரா

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் பாலம் அருகில், சமூகவிரோத செயல்கள் நடப்பதை தடுக்க, அப்பகுதியில், போலீசார், கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.நாயக்கன்பாளையத்தில் இருந்து கோவனுார் செல்லும் வழியில், பாலம் உள்ளது.கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாலத்துக்கு அடியில், முகம் மற்றும் கை, கால்கள் தீயில் கருகிய நிலையில், 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவ்வழக்கில், கொலை செய்யப்பட்டவர், குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில், இப்பாலத்தின் அருகே, சில நாட்களுக்கு முன், ஒருவர் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, பாலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைக் கண்காணிக்க, போலீசார், கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.இதனால், அப்பகுதியில் சமூகவிரோத செயல்கள் நடப்பதை, தவிர்க்க முடியும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X