அ.தி.மு.க.,வினர் எங்கள் பக்கம் :அ.ம.மு.க., சென்டிமென்ட் வலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வினர் எங்கள் பக்கம் :அ.ம.மு.க., 'சென்டிமென்ட்' வலை

Added : அக் 06, 2021
Share
அன்னுார்:'உண்மையான அ.தி.மு.க., தொண்டர்கள், எங்கள் பக்கம்தான்' என, அ.ம.மு.க.,வினர், சென்டிமென்டாக, தேர்தல் பிரசாரத்தில் பேசி வருகின்றனர்.மாவட்ட கவுன்சிலர் தேர்தலுக்காக, அ.ம.மு.க., வேட்பாளர் கஸ்துாரியை ஆதரித்து, ஒட்டர்பாளையம் ஊராட்சியில், அல்லிக்காரம்பாளையம், ஆயிமாபுதுார், ஜீவா நகர், அழகாபுரி நகர் பகுதியில், துடும்பு ஆட்டத்தோடு, பட்டாசு வெடித்து, ஒன்றியச் செயலாளர் நாகராஜன்

அன்னுார்:'உண்மையான அ.தி.மு.க., தொண்டர்கள், எங்கள் பக்கம்தான்' என, அ.ம.மு.க.,வினர், சென்டிமென்டாக, தேர்தல் பிரசாரத்தில் பேசி வருகின்றனர்.மாவட்ட கவுன்சிலர் தேர்தலுக்காக, அ.ம.மு.க., வேட்பாளர் கஸ்துாரியை ஆதரித்து, ஒட்டர்பாளையம் ஊராட்சியில், அல்லிக்காரம்பாளையம், ஆயிமாபுதுார், ஜீவா நகர், அழகாபுரி நகர் பகுதியில், துடும்பு ஆட்டத்தோடு, பட்டாசு வெடித்து, ஒன்றியச் செயலாளர் நாகராஜன் தலைமையில், பிரசாரம் நடந்தது.திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், "அ.தி.மு.க.,வின் உண்மையான தொண்டர்கள் அ.ம.மு.க.,வில் தான் உள்ளனர். ஒரு சில தலைவர்கள் மட்டுமே அ.தி.மு.க.,வில் உள்ளனர். அ.ம.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றால், நேர்மையாக செயல்படுவார். அடித்தட்டு மக்களுக்காக பாடுபடுவார்" என்றார்.பிரசாரத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., ரோகிணி, வடக்கு மாவட்ட செயலாளர் அலாவுதீன், ஐ.டி.அணி மாநில துணை செயலாளர் சுப்பையன் உள்பட பலர் பங்கேற்றனர்.படவிளக்கம்அன்னுார் அருகே ஒட்டர்பாளையத்தில், அ.ம.மு.க., வேட்பாளரை ஆதரித்து, பிரசாரம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X