பொது செய்தி

தமிழ்நாடு

ஆதார் திருத்தம் செய்ய ஆறு நாள் காத்திருப்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
அன்னுார்:ஆதாரில் திருத்தம் மேற்கொள்ள, ஆறு நாட்களுக்குப் பிறகே, விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், அன்னுார் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.அன்னுார் தாலுகா அலுவலக வளாகத்தில், ஆதார் மையம் செயல்படுகிறது. அன்னுார் எஸ்.எஸ். குளம் ஒன்றியங்களில் உள்ள, 28 ஊராட்சிகள் மற்றும் மூன்று பேரூராட்சிகளை சேர்ந்த மக்கள், ஆதார் பதிவு செய்ய, திருத்தம் செய்ய, ரேகையைப்
 ஆதார் திருத்தம் செய்ய ஆறு நாள் காத்திருப்பு

அன்னுார்:ஆதாரில் திருத்தம் மேற்கொள்ள, ஆறு நாட்களுக்குப் பிறகே, விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், அன்னுார் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.அன்னுார் தாலுகா அலுவலக வளாகத்தில், ஆதார் மையம் செயல்படுகிறது. அன்னுார் எஸ்.எஸ். குளம் ஒன்றியங்களில் உள்ள, 28 ஊராட்சிகள் மற்றும் மூன்று பேரூராட்சிகளை சேர்ந்த மக்கள், ஆதார் பதிவு செய்ய, திருத்தம் செய்ய, ரேகையைப் புதுப்பிக்க இங்கு வருகின்றனர்.குறிப்பிட்ட சில திருத்தங்களை, தனியார் மையங்களில் செய்ய முடியும். அனைத்து திருத்தங்களும், தாலுகா அலுவலக ஆதார் மையம் மற்றும் தபால் அலுவலகங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. தனியார் மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பெரும்பாலான சமயங்களில், தபால் அலுவலகத்தில், இணைய இணைப்பில் பிரச்னை இருப்பதால், தாலுகா அலுவலகத்திற்கு அதிக மக்கள் வருகின்றனர். சில நாட்களாக, ரேஷன் கடைகளில் ரேகை பதிவு சரியாக இல்லாவிட்டால், ஆதார் மையத்தில் புதுப்பித்து கொண்டு வந்தால்தான் பொருள் தருவோம் என, திருப்பி அனுபுவதால் ஆதார் மையங்களுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.அதிக மக்கள், டோக்கன் பெற்று சென்று விட்டனர். டோக்கன்கள் முடிந்துவிட்டதால் வரும் 11ம் தேதிதான், ஆதார் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், ஆதார் மையத்துக்கு வருவோர், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, 'அன்னுார் தாலுகா அலுவலகத்தில், கூடுதல் ஆதார் மையம் அமைக்க வேண்டும். எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் ஆதார் மையம் அமைக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X