சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு சுவர்களில் போஸ்டர் மயம்; அதிகாரிகள் கைகட்டி மவுனம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் பேரூராட்சியில், பெரும்பாலான அரசு அலுவலகங்களில், கட்சி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மவுனம் சாதிக்கின்றனர்.அன்னுார் ஒன்றியத்தில், 15 ஊராட்சிகளில், வரும் 9ம் தேதி மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நடைபெறுகிறது. ஒன்றியம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது.தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள
 அரசு சுவர்களில் போஸ்டர் மயம்; அதிகாரிகள் கைகட்டி மவுனம்

அன்னுார்:அன்னுார் பேரூராட்சியில், பெரும்பாலான அரசு அலுவலகங்களில், கட்சி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மவுனம் சாதிக்கின்றனர்.அன்னுார் ஒன்றியத்தில், 15 ஊராட்சிகளில், வரும் 9ம் தேதி மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நடைபெறுகிறது. ஒன்றியம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது.தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் நடைபெறும் பகுதியில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அன்னுாரில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவிலேயே மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நடக்கும் ஒட்டர்பாளையம், வடக்கலுார், கஞ்சப்பள்ளி ஊராட்சிகள் அமைந்துள்ளன. எனவே, பேரூராட்சி எல்லைக்குள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும். எனினும், அன்னுார் மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சுற்றுச்சுவரில் ஆளுங்கட்சி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.பழைய பேரூராட்சி அலுவலக கட்டடம் முன்புற சுவரிலும் அ.தி.மு.க., தி.மு.க., போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.அன்னுார் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.தேர்தல் அலுவலகம் செயல்படும், அன்னுார் ஒன்றிய அலுவலகத்தின் முன்புற சுற்றுச்சுவரில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், அப்படியோர் சம்பவமே நடக்காததுபோல், கண்மூடி மவுனம் சாதிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X