பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி மையம் ஆளுங்கட்சியினருக்கு சாதகம் என புகார்

Added : அக் 06, 2021
Share
Advertisement
மணிமங்கலம் ஊராட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு மையமாக, மணிமங்கலம் அரசு தொடக்கப் பள்ளி தான் இருந்து வந்தது.ஆனால் ஆளுங்கட்சியினர் அவர்களுக்கு சாதகமாக, அருகே உள்ள சேத்துப்பட்டு ஊராட்சி யில் ஒரு தனியார் பள்ளிக்கு ஓட்டுச்சாவடி மையத்தை மாற்றி உள்ளனர். பழையபடி மணிமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியிலேயே ஓட்டுப்பதிவு மையம் செயல்பட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குன்றத்துார் ஒன்றியம்

மணிமங்கலம் ஊராட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு மையமாக, மணிமங்கலம் அரசு தொடக்கப் பள்ளி தான் இருந்து வந்தது.

ஆனால் ஆளுங்கட்சியினர் அவர்களுக்கு சாதகமாக, அருகே உள்ள சேத்துப்பட்டு ஊராட்சி யில் ஒரு தனியார் பள்ளிக்கு ஓட்டுச்சாவடி மையத்தை மாற்றி உள்ளனர். பழையபடி மணிமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியிலேயே ஓட்டுப்பதிவு மையம் செயல்பட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, குன்றத்துார் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான தேவராஜ், கலெக்டரிம் அளித்த மனுவில் கூறியுள்ளார்.மேலும் அதில், 'ஆளுங்கட்சியினர் வெற்றி பெறுவதற்காக, அனைத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மணிமங்கலம் ஊராட்சியில் தேர்தல் நடக்கும் நாளன்று அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு 'கேமரா' பொருத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.இவர் கூறியதற்கு மாறாக, குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், இவ்வாறு கூறினார்.அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மணிமங்கலம் ஊராட்சியில் உள்ள காந்தி நகர் மக்கள், மூன்றரை கி.மீ., துாரம் சென்று ஓட்டளிக்க வேண்டிய சூழல் இருந்தது.காந்தி நகர் பகுதி மக்களுக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, மாவட்ட கலெக்டர் அனுமதியுடன் தனியார் பள்ளியில் ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X