பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ரத்து செய்வதை தடுக்க புது வசதி

Added : அக் 06, 2021
Share
Advertisement
சென்னை:ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த பின், ஆவணங்கள் தேவைப்பட்டால் மீண்டும் பதிவேற்றம் செய்ய, புதிய வசதி துவக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வசிப்போர் புதிய ரேஷன் கார்டுக்கு, உணவு வழங்கல் துறையின், www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு, 'ஆதார்' எண்ணுடன், முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களின் நகலை பதிவேற்ற வேண்டும்.அதை இணையதளம் வாயிலாகவே அதிகாரிகள்

சென்னை:ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த பின், ஆவணங்கள் தேவைப்பட்டால் மீண்டும் பதிவேற்றம் செய்ய, புதிய வசதி துவக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வசிப்போர் புதிய ரேஷன் கார்டுக்கு, உணவு வழங்கல் துறையின், www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு, 'ஆதார்' எண்ணுடன், முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களின் நகலை பதிவேற்ற வேண்டும்.அதை இணையதளம் வாயிலாகவே அதிகாரிகள் சரிபார்த்து, வீடுகளுக்கு கள ஆய்வு ஊழியர்களை அனுப்பி கார்டு வழங்க பரிந்துரை செய்வர்.

பலர் போதிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி, விண்ணப்பங்களை நிராகரித்து விடுவதால், விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இது குறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆவணங்கள் இல்லை; சரியில்லை என இனி விண்ணப்பத்தை ரத்து செய்ய முடியாது. அதற்காக இணையதளத்தில், 'மறுபரிசீலனை விண்ணப்பம்' என்ற புதிய பகுதி துவக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் தேவைப்படும் விபரம், எஸ்.எம்.எஸ்., வாயிலாக விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.விண்ணப்பிக்கும் போது மொபைல் போன் எண்ணுக்கு அனுப்பிய குறியீட்டு எண்ணை, மறுபரிசீலனை விண்ணப்ப பக்கத்தில் குறிப்பிட வேண்டும். அந்த பக்கம் திறக்கப்பட்டதும், மொபைல் போன் எண்ணை பதிவிட்டு, ஒருமுறை கடவு எண்ணை பதிவிட வேண்டும்.பின், அந்த பக்கத்தில் ஏற்கனவே விண்ணப்பித்த விபரங்களையும்; மேல் பகுதியில் தேவைப்படும் விபரங்களையும் காட்டும். அதன் அடிப்படையில், ஆவணங்களை பதிவேற்றலாம்.

திருத்தங்களை செய்து சமர்ப்பிக்க வேண்டும்.அதிகாரிகள், அதை சரிபார்த்து புது கார்டு வழங்குவது, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கு ஒப்புதல் தருவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X