பொது செய்தி

தமிழ்நாடு

8ம் வகுப்பு தனித்தேர்வு நவம்பர் 8ல் துவக்கம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
சென்னை:'தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வு நவம்பர், 8 முதல் நடத்தப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தனி தேர்வர் களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, நவம்பர் 8 முதல் 12 வரை நடத்தப்படும்.இதில் பங்கேற்க விரும்புவோரின் வயது, அக்., 1ல் 12 ஆண்டு, ஆறு மாதங்கள் முடிந்திருக்க

சென்னை:'தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வு நவம்பர், 8 முதல் நடத்தப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தனி தேர்வர் களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, நவம்பர் 8 முதல் 12 வரை நடத்தப்படும்.இதில் பங்கேற்க விரும்புவோரின் வயது, அக்., 1ல் 12 ஆண்டு, ஆறு மாதங்கள் முடிந்திருக்க வேண்டும்.

தகுதியுள்ளவர்கள் அக்டோபர் 11 முதல் 18 வரை, தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று, 'ஆன்லைன்' வழியில் பதிவு செய்யலாம். சேவை மைய முகவரிகளை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள், 20ம் தேதி தட்கல் சிறப்பு திட்டத்தில் கூடுதலாக 500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விரிவான தகவல்கள் மற்றும் தேர்வு அட்டவணையை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X