சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் மக்கள் கடும் அவதி| Dinamalar

சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் மக்கள் கடும் அவதி

Added : அக் 06, 2021
Share
நுங்கம்பாக்கம் : சென்னையில் பிரதான சாலையில் தேங்கிய மழைநீரை அகற்ற, மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்காததால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு, தயார் நிலையில் இருக்க அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், தேனாம்பேட்டை மண்டலத்தில் முன்னெச்சரிக்கை
 சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் மக்கள் கடும் அவதி

நுங்கம்பாக்கம் : சென்னையில் பிரதான சாலையில் தேங்கிய மழைநீரை அகற்ற, மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்காததால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு, தயார் நிலையில் இருக்க அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தேனாம்பேட்டை மண்டலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதுவும் பின்பற்றப்படவில்லை என்பது நேற்று காலை பெய்த மழையின்போதே, வெட்ட வெளிச்சமானது. பல பிரதான சாலைகளில் தேங்கிய மழை நீர் வடியவில்லை.குறிப்பாக, தி.நகர், டாக்டர் பிரகாசம் சாலையில் மழை நீர் குளம்போல் தேங்கியதால், பகுதிமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக டாக்டர் பிரகாசம் சாலையின் ஒருபுறம், உயர் மின் அழுத்த வடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பகுதி, முறையாக மூடப்படாமல் உள்ளது. இதனால், பள்ளம் இருப்பதை அறியாமல், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது.எனவே, மழைக்காலங்களில் மாநகராட்சியினர் அலட்சியம் காட்டாமல், சாலையில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X