பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரின் அணுகுமுறை எப்படி; சொல்லுங்க! சமூகவலைதள முகவரி வெளியீடு

Added : அக் 06, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:போலீசாரின் அணுகுமுறை குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க, சமூக வலைத்தள முகவரிகளை, மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் வெளியிட்டுள்ளார்.கடந்த மாதம், கோவை மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன், உட்கோட்ட அலுவலகம் மற்றும் காவல்துறை இயங்கக்கூடிய அனைத்து சிறப்பு பிரிவு அலுவலகங்களின் நுழைவாயிலில், புகார்
போலீசாரின் அணுகுமுறை எப்படி; சொல்லுங்க! சமூகவலைதள முகவரி வெளியீடு

பெ.நா.பாளையம்:போலீசாரின் அணுகுமுறை குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க, சமூக வலைத்தள முகவரிகளை, மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் வெளியிட்டுள்ளார்.கடந்த மாதம், கோவை மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன், உட்கோட்ட அலுவலகம் மற்றும் காவல்துறை இயங்கக்கூடிய அனைத்து சிறப்பு பிரிவு அலுவலகங்களின் நுழைவாயிலில், புகார் பெட்டி வைக்க அறிவுறுத்தி இருந்தார்.அ

தில், போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களிடம், போலீசாரின் அணுகுமுறை குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துகளை எழுதி, அப்பெட்டியில் தாராளமாக போடலாம் என, அறிவித்திருந்தார்.இத்திட்டத்தை பொதுமக்கள் பாராட்டிய அளவுக்கு வரவேற்பு அளிக்கவில்லை. போலீசாரின் அணுகுமுறைகள் குறித்த கருத்தை, இப்பெட்டியில், மக்கள் அதிகம் சேர்ப்பிக்கவில்லை.இதையடுத்து, பொதுமக்கள் இன்னும் எளிதில் தங்களது கருத்தை தெரிவிக்கும் விதத்தில், சமூக வலைதளங்களில் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என, எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்துக்காக, டிவிட்டரில் @cbedtpolice, முகநுாலில் @Coimbatore District Police, இன்ஸ்டாகிராமில் @Coimbatore district police என்ற முகவரிகளில் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இந்த சமூக வலைத்தள முகவரிகளில், தொடர்புடைய போலீஸ் ஸ்டேஷன் குறித்து கருத்து தெரிவிக்கலாம். இதற்கான படிவத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளிக்கும் போது காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் தங்களிடம் நடந்துகொள்ளும் விதம் குறித்து தங்களுக்கு திருப்தி அளிக்கிறதா, புகார் மனுவை பெற்றுக் கொண்டதற்கான பதில் அறிக்கை தருகிறார்களா, மனு விசாரணைக்காக, அழைப்பானை கொடுத்து, தங்களை காவல் நிலையத்திற்கு அழைத்தார்களா, மனு விசாரணை செய்யும்போது, மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் இருதரப்பினரையும் வைத்து விசாரணை செய்யப்பட்டதா, மனு விசாரணையின் முடிவு, தங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறதா என்பது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து சமர்ப்பிக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை், 77081 00100 என்ற 'வாட்ஸ்ஆப்' எண்ணிற்கு அனுப்பி, குறைகளுக்கான தீர்வுகளை பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X