பொது செய்தி

தமிழ்நாடு

முடி மழிப்போருக்கு ஊக்கத் தொகை திட்டத்தை துவக்கி வைத்தார் ஸ்டாலின்

Added : அக் 06, 2021
Share
Advertisement
சென்னை:கோவில்களில் பக்தர்களின் காணிக்கை முடியை மழிக்கும் பணியாளர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.திருப்பதி திருமலை போல, தமிழக கோவில்களில் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை முடி மழிப்பதை, தமிழக அரசு இலவசமாக்கி உள்ளது. செப்., 9 முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு முன், முடி காணிக்கைக்கு 30 ரூபாய் கட்டணம்
 முடி மழிப்போருக்கு ஊக்கத் தொகை  திட்டத்தை துவக்கி வைத்தார் ஸ்டாலின்

சென்னை:கோவில்களில் பக்தர்களின் காணிக்கை முடியை மழிக்கும் பணியாளர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

திருப்பதி திருமலை போல, தமிழக கோவில்களில் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை முடி மழிப்பதை, தமிழக அரசு இலவசமாக்கி உள்ளது. செப்., 9 முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு முன், முடி காணிக்கைக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து, கோவில்களில் முடி மழிக்கும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மாதம் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என, சட்டசபையில் அரசு அறிவித்தது.இதன்படி, காணிக்கை முடி மழிக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் துவக்க விழா, சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள பி.கே.என்., அரங்கில் நடந்தது.

ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதன் அடையாளமாக 25 பணியாளர்களுக்கு, தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகையை அவர் வழங்கினார்.அப்போது, முதல்வருக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அவற்றை முதல்வர் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியின் துவக்கமாக, அறநிலையங்கள் முதன்மை செயலர் சந்திரமோகன் வரவேற்று பேசியதாவது:கோவில்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவது, ஆண்டாண்டு காலமாக உள்ளது. இதற்காக, பக்தர்களிடம் இருந்து 30 ரூபாய் கட்டணம் பெறப்பட்டு வந்தது. பக்தர்கள் வசதிக்காக இலவசமாக்கப்பட்டு உள்ளது.

முடி மழிப்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படும். இந்த வகையில், தமிழகத்தில் உள்ள 349 கோவில்களில், 27 பெண் பணியாளர்கள் உட்பட 1,744 பேர் பயன் பெறுவர். இத்திட்டத்திற்காக ஆண்டிற்கு 10.46 கோடி ரூபாய் செலவாகும்.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பழநி தண்டாயுதபாணி முருகன் கோவில் செல்வம் குருக்கள், பேச்சாளர் அருள்பிரகாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் நன்றி கூறினார்.

இவ்விழாவில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், அறநிலையத் துறை கூடுதல் கமிஷனர் கண்ணன், எம்.எல்.ஏ., பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X