மகாளய அமாவாசை: கோவில்கள் அடைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகாளய அமாவாசை: கோவில்கள் அடைப்பு

Added : அக் 06, 2021
Share
மேட்டுப்பாளையம்:கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க, மகாளய அமாவாசையான இன்று, அரங்கநாதர் கோவில், வனபத்ரகாளியம்மன் ஆகிய கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளன.புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இந்த நாட்களில், ஆற்றின் கரையோரம், முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு, ஆடைகளை படையலிட்டு வழிபடுவர்.இன்று, மகாளய அமாவாசை. தமிழக அரசு,

மேட்டுப்பாளையம்:கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க, மகாளய அமாவாசையான இன்று, அரங்கநாதர் கோவில், வனபத்ரகாளியம்மன் ஆகிய கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளன.புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இந்த நாட்களில், ஆற்றின் கரையோரம், முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு, ஆடைகளை படையலிட்டு வழிபடுவர்.இன்று, மகாளய அமாவாசை. தமிழக அரசு, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, முக்கிய கோவில்களில் பக்தர்கள், வழிபாட்டிற்கு அனுமதி மறுத்து அறிவித்துள்ளது.இதையடுத்து, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகிய இரு கோவில்களில், வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஆனால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை.அதேபோன்று, மேட்டுப்பாளையம் நகராட்சி, கோவிந்தபிள்ளை மயானத்தில் உள்ள நந்தவனத்தில், இன்று மகாளய அமாவாசையை நாளில், எவ்வித திதி கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறாது என, நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X