சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பங்காரு அடிகள் பற்றி அவதுாறு: எஸ்.பி.,யிடம் புகார்

Added : அக் 06, 2021
Share
Advertisement
நாமக்கல்:'பங்காரு அடிகள் மற்றும் வழிபாட்டு முறைகளை பற்றி அவதுாறாக பதிவு செய்த, 'யு டியூப்' பதிவை நீக்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட செவ்வாடை பக்தர்கள், எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளனர்.புகார் விபரம்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆன்மீக குரு பங்காரு அடிகளுக்கு, உலகம் முழுதும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான வழிபாட்டு மன்றங்களும், சக்தி பீடங்களும் உள்ளன.
 பங்காரு அடிகள் பற்றி அவதுாறு: எஸ்.பி.,யிடம் புகார்

நாமக்கல்:'பங்காரு அடிகள் மற்றும் வழிபாட்டு முறைகளை பற்றி அவதுாறாக பதிவு செய்த, 'யு டியூப்' பதிவை நீக்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட செவ்வாடை பக்தர்கள், எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளனர்.

புகார் விபரம்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆன்மீக குரு பங்காரு அடிகளுக்கு, உலகம் முழுதும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான வழிபாட்டு மன்றங்களும், சக்தி பீடங்களும் உள்ளன. மன்றங்கள் மூலம், மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு சமுதாய நலப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.இந்த இயக்கத்தில், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சவுக்கு சங்கர் என்பவர், பங்காரு அடிகள் பற்றியும், வழிபாட்டு முறைகளை பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளை பதிவு செய்து, கடந்த 30ம் தேதி ஆதன் என்ற தமிழ் யு டியூப்பில் பதிவேற்றி உள்ளார்.உலகம் முழுதும் ஒரே தாய், ஒரே குலம் என்ற முறையில் ஜாதி, மதம், இனம், பேதம் இல்லாமல் 50 ஆண்டுகளாக வழி நடத்தும் பங்காரு அடிகள் மீது, தனி மனித தாக்குதல் நடத்தும் வகையிலும், மத நல்லிணக்கத்துக்கு எதிரான வகையிலும், உள் நோக்கத்துடன் பதிவு செய்துள்ளார்.

செவ்வாடை பக்தர்கள் மனதை புண்படுத்தும் வகையில் பதிவு அமைந்துள்ளதால், அந்த பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X