கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கைதிகளை விடுவிக்க வழக்கு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : அக் 06, 2021
Share
Advertisement
மதுரை:கைதிகளை விடுவிக்க கோரிய மனுவை பரிசீலிக்க, அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை, சின்ன சொக்கிகுளம் ராஜா தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பல்வேறு சிறைகளில், ஆயுள் கைதிகளாக உள்ளவர்களில் 125 பேர் வயது மூப்பு, உடல்நல பாதிப்பால் சிரமப் படுகின்றனர். சிறை வாழ்க்கைக்கு தகுதியற்றவர்களாக உள்ளனர். 125 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்.இதை பரிசீலிக்க,

மதுரை:கைதிகளை விடுவிக்க கோரிய மனுவை பரிசீலிக்க, அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, சின்ன சொக்கிகுளம் ராஜா தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பல்வேறு சிறைகளில், ஆயுள் கைதிகளாக உள்ளவர்களில் 125 பேர் வயது மூப்பு, உடல்நல பாதிப்பால் சிரமப் படுகின்றனர். சிறை வாழ்க்கைக்கு தகுதியற்றவர்களாக உள்ளனர். 125 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்.

இதை பரிசீலிக்க, அறிவுரைக் குழுமம் அமைத்து, அதன் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஆர்.பொங்கியப்பன், 'தமிழக உள்துறை - சிறை, கூடுதல் தலைமைச் செயலர், சிறைத் துறை டி.ஜி.பி., மற்றும் டி.ஐ.ஜி., 12 வாரங்களில் மனுவை பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X