பொது செய்தி

தமிழ்நாடு

அரசுப்பள்ளி சுவர்களில் கண்கவர் ஓவியங்கள்: அசத்தும் 'பட்டாம்பூச்சி' ஆசிரியர்கள்

Added : அக் 06, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:அரசு பள்ளிகளில், மாணவர்களைக் கவரும் வகையில், பல வகையான ஓவியங்களை, 'பட்டாம்பூச்சிகள்' அமைப்பைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் வரைந்து வருகின்றனர்.திருப்பூர் பாண்டியன் நகரில் உள்ள துவக்கப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சந்தோஷ்குமார், சக ஆசிரியர்களை ஒன்றிணைத்து, 'பட்டாம்பூச்சிகள் அரசு பள்ளிகளை காப்போம்' என்ற அமைப்பை துவக்கியுள்ளார்.இந்த
 அரசுப்பள்ளி சுவர்களில் கண்கவர் ஓவியங்கள்: அசத்தும் 'பட்டாம்பூச்சி' ஆசிரியர்கள்

மேட்டுப்பாளையம்:அரசு பள்ளிகளில், மாணவர்களைக் கவரும் வகையில், பல வகையான ஓவியங்களை, 'பட்டாம்பூச்சிகள்' அமைப்பைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் வரைந்து வருகின்றனர்.திருப்பூர் பாண்டியன் நகரில் உள்ள துவக்கப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சந்தோஷ்குமார், சக ஆசிரியர்களை ஒன்றிணைத்து, 'பட்டாம்பூச்சிகள் அரசு பள்ளிகளை காப்போம்' என்ற அமைப்பை துவக்கியுள்ளார்.இந்த அமைப்பில் உள்ள ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில், மலைப்பகுதி மற்றும் நிலப்பகுதியில் உள்ள கிராமப்புற பள்ளிகளில், தேசத்தலைவர்களின் ஓவியங்கள், இயற்கை காட்சியுடன் அமைந்த விலங்குகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், அருவி ஆகிய ஓவியங்களை, அரசு பள்ளிச் சுவர்களில் வரைந்து, அவற்றை அழகூட்டி வருகின்றனர். காரமடை அடுத்த நீலம்பதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் சந்தோஷ்குமார், கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், ஹரிகிருஷ்ணன், ரவிச்சந்திரன், பிரபு ஆகியோர் ஒன்றிணைந்து, 2 நாட்கள் தங்கி, ஓவியங்களை வரைந்தனர்.ஓவியங்கள் வரைவதற்கான செலவுகளை பள்ளி ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர். இதுகுறித்து 'பட்டாம்பூச்சிகள்' அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் கடந்த, 5 ஆண்டுகளாக, அரசு பள்ளிகளை தேர்வு செய்து, விடுமுறை நாட்களில் பள்ளிகளின் சுவர்களில், ஓவியங்களை வரைந்து வருகிறோம்.இது மாணவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகள் படத்தை பாடப்புத்தகத்தில் பார்ப்பதைவிட, சுவர்களில் இருக்கும் ஓவியங்களை பார்க்கும்போது, அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். வகுப்பறையின் உள்ளே காய்கறிகள், பழங்கள், பறவைகள், எழுத்துகள், வடிவங்கள் ஆகியவற்றை மாணவர்கள் எளிதில் பார்த்து கற்கும் வகையில், படங்களாக வரைகிறோம்.நீலம்பதி அரசு பள்ளியில், 15 அடியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஓவியம் வரையப்பட்டுள்ளது.நாங்கள் இப்பணியை செய்ய எவ்வித கட்டணமும், கூலியும் வாங்குவதில்லை. எங்களுக்கு கிடைக்கும் விடுமுறையை வீணாக்காமல், அரசு பள்ளி மாணவர்களுக்காக, இந்த சேவையை செய்து வருகிறோம். உதவிகள் கிடைக்கும் பட்சத்தில், இன்னும் பல அரசு பள்ளிகளில், பல வண்ண ஓவியங்கள் வரையப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X