சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளிர்பானத்தில் விஷம் தாய், மகன் தற்கொலை

Added : அக் 06, 2021
Share
Advertisement
ப.வேலுார்:உடல்நிலை பாதிப்பால், குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த தாய், மகன் உயிரிழந்தனர். தந்தை சிகிச்சை பெற்று வருகிறார்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார், சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் சையது அக்பர், 60; மனைவி பாத்திமா, 55; மகன்கள் சிக்கந்தர் பாஷா, 35; பர்கத், 30. சிக்கந்தர் பாஷா திருமணமாகி, வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பர்கத், பெற்றோருடன் வசித்து வந்தார்.இந்நிலையில்,
 குளிர்பானத்தில் விஷம்  தாய், மகன் தற்கொலை

ப.வேலுார்:உடல்நிலை பாதிப்பால், குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த தாய், மகன் உயிரிழந்தனர். தந்தை சிகிச்சை பெற்று வருகிறார்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார், சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் சையது அக்பர், 60; மனைவி பாத்திமா, 55; மகன்கள் சிக்கந்தர் பாஷா, 35; பர்கத், 30. சிக்கந்தர் பாஷா திருமணமாகி, வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பர்கத், பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு கடிதம் கொடுத்து, பக்கத்து தெருவில் உள்ள தன் மைத்துனரிடம் கொடுத்து விடும்படி, சையது அக்பர் கூறியுள்ளார். கடிதத்தை பார்த்ததும், அதிர்ச்சியடைந்த மைத்துனர் மற்றும் உறவினர்கள் அலறியடித்து ஓடி வந்தனர்.அதற்குள், குளிர்பானத்தில் விஷம் கலந்து பாத்திமா, பர்கத் ஆகியோருடன், சையது அக்பரும் குடித்து, உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

அவர்களை மீட்டு, ப.வேலுாரில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாத்திமா, பர்கத் உயிரிழந்தனர். சையது அக்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.போலீஸ் விசாரணையில், சையது அக்பர், பாத்திமா இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். பர்கத் மனநிலையும் சரியில்லாததால், விரக்தியில் தற்கொலை முடிவு எடுத்தது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X