சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரி சோதனை

Added : அக் 06, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை, காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்களில் உள்ள பிரபல ஜவுளிக்கடை மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்புடைய, 22 இடங்களில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.காஞ்சிபுரத்தின் பழமையான ஜவுளிக்கடை, தற்போது சென்னை உட்பட, பல இடங்களில் இயங்கி வருகிறது. இவற்றில் வரி ஏய்ப்பு நடந்ததாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.காஞ்சிபுரத்தில் உள்ள துணிக்கடை உரிமையாளர்

சென்னை:சென்னை, காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்களில் உள்ள பிரபல ஜவுளிக்கடை மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்புடைய, 22 இடங்களில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

காஞ்சிபுரத்தின் பழமையான ஜவுளிக்கடை, தற்போது சென்னை உட்பட, பல இடங்களில் இயங்கி வருகிறது. இவற்றில் வரி ஏய்ப்பு நடந்ததாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

காஞ்சிபுரத்தில் உள்ள துணிக்கடை உரிமையாளர் வீடு, கடை, சென்னை தி.நகர், வேலுாரில் உள்ள ஜவுளி கடைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினர்.இதே போல, சென்னை, காஞ்சிபுரத்தில் செயல்படக் கூடிய நிதி நிறுவனத்திலும், சோதனை நடந்தது. அவற்றின் இயக்குனர்கள் வீடுகள், அவர்களது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களிலும், வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை, காஞ்சிபுரம், வேலுார் உட்பட மொத்தம் 22 இடங்களில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் மற்றும் பண பரிவத்தனைகள் தொடர்பான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகளிடம் கேட்டபோது, விபரம் ஏதும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X