சட்ட விரோதமாக கேரளாவுக்கு பறக்கும் கருங்கல் லோடு: கட்டுப்படுத்த போலீசார் கண்காணிப்பு தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட விரோதமாக கேரளாவுக்கு பறக்கும் கருங்கல் லோடு: கட்டுப்படுத்த போலீசார் கண்காணிப்பு தேவை

Added : அக் 06, 2021
Share
கிணத்துக்கடவு:பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றிய பகுதியில், கேரளா எல்லை ரோடுகளில் போலீசார் கண்காணிப்பை அதிகரித்து, கருங்கல் கடத்தல் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில், அதிக எண்ணிக்கையில், கல்குவாரிகள் அமைந்துள்ளன. தற்போதும், ஆழமான குவாரிகளில் வெடி வைத்து தகர்க்கப்படும்

கிணத்துக்கடவு:பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றிய பகுதியில், கேரளா எல்லை ரோடுகளில் போலீசார் கண்காணிப்பை அதிகரித்து, கருங்கல் கடத்தல் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில், அதிக எண்ணிக்கையில், கல்குவாரிகள் அமைந்துள்ளன. தற்போதும், ஆழமான குவாரிகளில் வெடி வைத்து தகர்க்கப்படும் கருங்கற்கள், மெட்டல், ஜல்லிக்கற்களாக உடைக்கப்பட்டு, சட்ட விரோதமாகவும், கூடுதல் பாரத்துடனும் கேரளா கொண்டு செல்லப்படுகின்றன.சமீப நாட்களாக, கிணத்துக்கடவு போலீசார், அரசம்பாளையம், காரச்சேரி பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொண்டு, கூடுதல் பாரம் ஏற்றி, கேரளா நோக்கி செல்லும் லாரிகளை பிடித்து, அபராதம் விதிக்கின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்தை ஒட்டிய வீரப்பகவுண்டனுார், ரங்கேகவுண்டனுார், சூலக்கல், சட்டக்கல்புதுார் வழியாக, கேரளா நோக்கி செல்லும் கருங்கல் பாரம் ஏற்றிய லாரிகளையும் மடக்கி பிடிக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் போலீசாரை வலியுறுத்துகின்றனர்.கடந்த காலங்களில், மதுக்கரை, பிச்சனுார், போத்தனுார், பொங்கலுார் பகுதிகளில் இருந்து, கேரளாவுக்கு சட்டக்கல்புதுார், வீரப்பகவுண்டனுார் மற்றும் வேலந்தாவளம் வழியாகவே கருங்கற்கள் கடத்தப்பட்டன. தற்போதும், கடத்தப்படுகின்றன.இந்த லாரிகளை பறிமுதல் செய்தாலே போதும், கருங்கல் கடத்தப்படுவது பெருமளவு குறைந்து விடும். எனவே, கேரளா எல்லை பகுதியில், கண்காணிப்பை போலீசார் கூடுதலாக்க வேண்டும், என்பது, சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X