விதை விற்பனை உரிமத்துக்கு சான்று துறையை அணுகலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதை விற்பனை உரிமத்துக்கு சான்று துறையை அணுகலாம்

Added : அக் 06, 2021
Share
கிணத்துக்கடவு:விதை விற்பனை உரிமத்தை, உரிய ஆவணங்களுடன் கோவை விதை ஆய்வு இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெறலாம், என, அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் அறிக்கை:விதைப்புக்கு தேவையான தரமான விதைகள், நாற்றுகள் ஆகியன விதை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. விதை மற்றும் நாற்றுகளை அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களில்

கிணத்துக்கடவு:விதை விற்பனை உரிமத்தை, உரிய ஆவணங்களுடன் கோவை விதை ஆய்வு இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெறலாம், என, அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் அறிக்கை:விதைப்புக்கு தேவையான தரமான விதைகள், நாற்றுகள் ஆகியன விதை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. விதை மற்றும் நாற்றுகளை அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களில் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.பொதுவாக, விதை மற்றும் நாற்றுகளை விற்பனை செய்ய உரிமம் தேவைப்படுவோர், விண்ணப்பப் 'படிவம் - அ' பூர்த்தி செய்து, ஆயிரம் ரூபாய் அரசு கணக்கில் செலுத்திய இணைய ரசீது, ஆதார் அட்டை நகல், வாடகை ஒப்பந்த பத்திரம், நில உரிமையாளர் என்பதற்கான சான்று, பாஸ்போர்ட் அளவில் இரண்டு போட்டோ, விதை விற்பனை செய்யும் இடத்தின் வரைபடம் ஆகியவற்றுடன், விதை ஆய்வுத்துறை இயக்குனர், 1424 ஏ, தடாகம் ரோடு, கோவை - 13 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இணைய வழியிலும் விண்ணப்பத்தை பதிவு செய்து, விற்பனை உரிமம் பெறலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X