பொது செய்தி

தமிழ்நாடு

பயிர்க்கடன் கிடைப்பதில் இழுபறி :காலிப்பணியிடம் நிரப்ப கோரிக்கை

Added : அக் 06, 2021
Share
Advertisement
உடுமலை:குடிமங்கலம் ஒன்றியத்தில், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்காக, மக்காச்சோளம் உட்பட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். விதை, இடுபொருட்கள் வாங்குவதற்காக, விருகல்பட்டி, அடிவள்ளி, வீதம்பட்டி உட்பட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.ஆனால், மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் பணியிடம் காலியாக இருப்பதால்,

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியத்தில், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்காக, மக்காச்சோளம் உட்பட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். விதை, இடுபொருட்கள் வாங்குவதற்காக, விருகல்பட்டி, அடிவள்ளி, வீதம்பட்டி உட்பட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.ஆனால், மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் பணியிடம் காலியாக இருப்பதால், குறித்த நேரத்தில், பயிர்க்கடன் கிடைக்காமல், இழுபறி ஏற்பட்டு, சாகுபடி செலவுக்கு பணம் இல்லாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனு: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்க்கடன் வழங்க வேண்டும். மேலும், பயிர்க்கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய, மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் பணியிடம் காலியாக இருப்பதால், குடிமங்கலம் ஒன்றியத்தின் மேற்குப்பகுதியிலுள்ள, 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இழுபறி நீடிக்கிறது. உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X