ஒரு போன் போதுமே! ரோடு சீரமைப்பதில் அலட்சியம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளியில் பேரூராட்சி அலுவலம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில், பிரதான ரோடு உருக்குலைந்து உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைக்காததால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.எம். குமரேசன், ஜமீன்ஊத்துக்குளி.குப்பை தேங்குவதால் அதிருப்திவால்பாறை நகரில், திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பை உள்ளிட்ட கழிவுகளால், நோய் பரவும்
 ஒரு போன் போதுமே! ரோடு சீரமைப்பதில் அலட்சியம்

பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளியில் பேரூராட்சி அலுவலம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில், பிரதான ரோடு உருக்குலைந்து உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைக்காததால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.எம். குமரேசன், ஜமீன்ஊத்துக்குளி.குப்பை தேங்குவதால் அதிருப்திவால்பாறை நகரில், திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பை உள்ளிட்ட கழிவுகளால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கும் குப்பையால், துர்நாற்றம் நிலவுவதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.ஏ. -ஆனந்தன், வால்பாறை.

புதுசா போட்ட ரோட்டில் பொத்தல்!ஆனைமலை அடுத்த ஆலாங்கடவு செல்லும் ரோடு, அமைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகிறது. தற்போதே ரோட்டில் பல இடங்கள் சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளன.

ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.எம்.கணேஷ், ஆலாங்கடவு.
இறைச்சி கழிவால் தொல்லைபொள்ளாச்சி, நா.மூ., சுங்கம், உடுமலை ரோட்டில், இறைச்சி கழிவுகள் கொட்டுவது அதிகரித்துள்ளது. இதனால், இந்த ரோட்டில் தெருநாய் தொல்லையும் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்.எஸ்.சரண்யா, ரெட்டியாரூர்.

தொட்டி இருக்கு நீர் இல்லை
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி ஊராட்சியில் இரு இடங்களில் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டிகள் உள்ளன. குழாய் இணைப்பு வழங்காமல் உள்ளதால், நீர் நிரப்புவதில்லை. கட்டமைப்பு ஏற்படுத்தியும் கால்நடைகளுக்கு பயன்படாமல் வீணாகிறது.கே. முருகேசன், கொண்டம்பட்டி.
சுகாதார சீர்கேடு
உடுமலை பழனியாண்டவர் நகரிலிருந்து, கொழுமம் ரோடு செல்லும் இணைப்பு பாதையில், இருபுறங்களிலும், குப்பையை திறந்தவெளியில், கொட்டி தீ வைத்து எரிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.கே.நடராஜன், உடுமலை.

துர்நாற்றம் தாங்கல
உடுமலை நாராயணன் காலனியில், கழுத்தறுத்தான் பள்ளத்திலிருந்து துார்வாரப்பட்ட கழிவுகளை ஆங்காங்கே கொட்டி வைத்திருப்பதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.என். ராஜ்குமார், உடுமலை.
குண்டும், குழியுமான ரோடு
உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோடு, குண்டும், குழியுமாக மாறி, வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். இதை சீரைமக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர். சந்தோஷ், உடுமலை.
தீர்வு காணப்படுமா?
உடுமலை புது பஸ் ஸ்டாண்ட் ஒட்டிய பொள்ளாச்சி ரோட்டை, இரு புறமும் மேம்படுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும். இதன் வாயிலாக, வாகனங்கள் செல்ல வாய்ப்பு ஏற்படும்.எல். சுரேஷ், கச்சேரி வீதி, உடுமலை.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை பழநி ரோடு வெஞ்சமடை வாய்க்கால் ஒட்டிய பகுதியில் குப்பை மற்றும் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால், தண்ணீர் மாசடைந்து சுகாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.டி. எழில்கமலன், சுந்தரம் நகர், உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X