ஒரு வாரத்தில் 3 மடங்கு தக்காளி விலை உயர்வு

Added : அக் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி பகுதியில் தக்காளி உற்பத்தி சரிவால், விலை மூன்று மடங்காக அதிகரித்து, மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் தக்காளி அதிகம் பயிரிடப்படுகிறது. உள்ளூர் உற்பத்தி போதுமான அளவு இருந்ததால், கடந்த ஆண்டு முழுக்க பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி, விற்பனையாகி வந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ தக்காளி, 12 - 15 ரூபாய் வரை

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பகுதியில் தக்காளி உற்பத்தி சரிவால், விலை மூன்று மடங்காக அதிகரித்து, மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் தக்காளி அதிகம் பயிரிடப்படுகிறது.

உள்ளூர் உற்பத்தி போதுமான அளவு இருந்ததால், கடந்த ஆண்டு முழுக்க பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி, விற்பனையாகி வந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ தக்காளி, 12 - 15 ரூபாய் வரை விற்பனையானது.தக்காளி விலை சரிவு ஏற்பட்ட போது, அறுவடை கூலிக்கு கூட கட்டுபடியாகததால், பழங்களை பறிக்காமல் செடியிலேயே விட்டனர்.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி, தீவிரமாக பெய்கிறது. தக்காளி பயிருக்கு அதிக மழைப் பொழிவால், விளைநிலத்தில் தக்காளி பழங்கள், செடிகள் பாதித்துள்ளன.இதனால், பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடுமையாக சரிந்துள்ளது. சந்தைக்கு வரத்து குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது. அதுவும், ஒரே வாரத்தில், 12 ரூபாயில் இருந்து, 40 - 42 ரூபாயாக தக்காளி விலை எகிறியுள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட தக்காளி பயிரை அகற்றி, புதிய நாற்றுகள் நடவு செய்து, உற்பத்தி அதிகரிக்கும் வரை, விலை அதிகமாகவே இருக்கும், என வியாபாரிகள் தெரிவித்தனர். விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X