ஆசிரியர் கவுன்சிலிங் ஒளிவு மறைவு கூடாது ஆசிரியர் கழக மாநில தலைவர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் கவுன்சிலிங் ஒளிவு மறைவு கூடாது ஆசிரியர் கழக மாநில தலைவர் தகவல்

Added : அக் 06, 2021
Share
சிவகங்கை:ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங்கை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும், என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர். இளங்கோவன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது,நவ., 1 முதல் தொடக்க பள்ளிகள் இயங்க உள்ளது. 2 ஆண்டாக ஆசிரியர் கவுன்சிலிங் நடத்தவில்லை. விரைவில் 2207 முதுகலை ஆசிரியர்களை நிரப்ப உள்ளனர். இவர்களுக்கு பணி வழங்கும் முன்

சிவகங்கை:ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங்கை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும், என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர். இளங்கோவன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது,நவ., 1 முதல் தொடக்க பள்ளிகள் இயங்க உள்ளது. 2 ஆண்டாக ஆசிரியர் கவுன்சிலிங் நடத்தவில்லை. விரைவில் 2207 முதுகலை ஆசிரியர்களை நிரப்ப உள்ளனர். இவர்களுக்கு பணி வழங்கும் முன் வெளிமாவட்டத்தில் பணிபுரியும் மாறுதல் பெற முடியாத ஆசிரியர்களுக்கு வாய்ப்பு தர கவுன்சிலிங் நடத்த வேண்டும்.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடத்தையும் காலி இடமாக காண்பித்து நிர்வாக மாறுதல் என எவ்வித மாறுதலும் செய்யாமல் நுாறு சதவீதம் ஒளிவுமறைவில்லா கவுன்சிலிங் நடத்த வேண்டும். இக்கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களை தக்க வைக்க ஆசிரியர், ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X