செய்திகள் சில வரிகளில்...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : அக் 06, 2021
Share
மாணவர்களுக்கு புத்தகம் வினியோகம்தமிழக அரசு சார்பில், பள்ளிகள் திறந்த பின் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. வால்பாறை தாலுக்காவில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு புத்தகம் வினியோகம்தமிழக அரசு சார்பில், பள்ளிகள் திறந்த பின் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. வால்பாறை தாலுக்காவில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகளை வழங்கினார்.

அவர், பேசும்போது, ''அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மடிக்கணினி, சைக்கிள், பாடபுத்தகம், நோட்டு, ரெயின்கோட், காலணி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பெற்றோர்களின் சிரமத்தை குறைக்க, அரசு பல்வேறு உதவிகள் வழங்குகிறது. மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். வகுப்பறையிலும், வெளியிலும் சமூக இடைவெளியை கடைபிடித்து, 'மாஸ்க்' அணிந்து செல்ல வேண்டும். தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்,'' என்றார்.
திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு

கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், நீர் சேமிப்பு குட்டைகள், தடுப்பணைகள், படித்துறையுடன் கூடிய நீர் நிலைகள் அமைக்கப்பட்டன.தற்போதைய நிலையில், இவை அனைத்தும், முட்புதர் சூழ்ந்துள்ளது. புதர்களை அகற்றி, குட்டைகளை துார்வாரி, மரங்கன்றுகள் நடும் பணி துவங்கியுள்ளன.இப்பணிகளை மாவட்ட உதவி திட்ட அதிகாரி கமலக்கண்ணன் நேற்று பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். அதேபோல, கோடங்கிபாளையம், வடசித்துார், குருநல்லிபாளையம் பகுதிகளில் நடக்கும் ஜல்ஜீவன் திட்டத்தில் தொட்டி அமைத்தல், குழாய் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டார். உதவி திட்ட அதிகாரியுடன், கிணத்துக்கடவு பி.டி.ஓ., விவேகானந்தன், பொறியாளர் ஜெயந்தி மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பங்கேற்றனர்.இரவில் யானைகள் உலா; மக்கள் அச்சம்வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன், சின்கோனா டான்டீ எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த யானைகள், ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தின.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் தோணிமுடி எஸ்டேட் மூன்றாம் டிவிஷனுக்குள் குட்டியுடன் சென்ற யானை, தொழிலாளர்களின் குடியிருப்பில் பயிரிடப்பட்ட வாழை, முருங்கையை உட்கொண்டது.குடியிருப்பின் பின் பகுதியில் இருந்த, செப்டிக் டேங்கை இடித்து சேதப்படுத்தியது. தொடர்ந்து மழை பெய்ததால், இரவு நேரத்தில் யானையை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர். மழை தொடரும் நிலையில், யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.குளத்தின் உபரிநீர் பாதை துார்வார மனுபொள்ளாச்சி சப் - கலெக்டரிடம், தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமையில், மகாலட்சுமி நகர், கிருஷ்ணசாமி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:டி.கோட்டாம்பட்டியில், பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல், பயன்பாட்டின்றி இருந்த குளம், சமீபத்தில் துார்வாரப்பட்டது. இதனால், சுற்றுப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் சேகரமாகி, நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டது.அதே சமயம், குளத்தின் மேற்கு பகுதியில், உபரிநீர் வெளியேறும் வழித்தடத்தை துார்வாராமல் விட்டுள்ளனர். இதனால், குளம் நிறைந்து, உபரிநீர் வெளியேற வழியின்றி, சுற்றுப்பகுதி சாக்கடை கால்வாய்களில் நீர் தேங்கி நின்று, கொசு உற்பத்தி, நோய் பரவலுக்கு வழி வகுக்கிறது.எனவே, உபரிநீர் வெளியேறும் வழித்தடத்தையும் சுத்தப்படுத்தி துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.பள்ளியில் வனவிலங்கு வார விழாஒவ்வொரு ஆண்டும் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில் வனவிலங்கு வார விழா நடக்கிறது.அதன்படி, உடுமலை அடுத்த பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த வனவிலங்கு வார விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் கண்ணகி தலைமை வகித்தார்.பசுமை படை மாணவி கனித்ரா வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன், வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார்.இதையடுத்து, மாணவர்களிடையே கட்டுரை ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியர்கள் தேவிகா, ரேணுகாதேவி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கழிவுநீருடன் கலக்கும் மழை வெள்ளம்உடுமலை நகரில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி ரோடுகளில், செப்பனிடுதல் மற்றும் விரிவாக்கப்பணிகள், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இச்சாலைகளில் தேங்கும் நீர் வடிந்து செல்வதற்கான வடிகால் வசதிகள், ஏற்படுத்தப்படாமல் உள்ளது.மழையின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்காத ரோடுகளில், ஆங்காங்கே பெரும் குழிகள் ஏற்படுகிறது.

குழிகளில் வாகனங்கள் இறங்கி, ஏறும் போது நாளடைவில் பெரிய பள்ளமாக மாறுகிறது.ஒவ்வொரு ஆண்டும் மழையின் போது இவ்வாறான அவலம் தலை துாக்குகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, பழனிரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட தேசிய மற்றும் நகர சாலைகளில், கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சில பகுதிகளில், கழிவுகளுடன் தேங்கும் மழை நீர், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.மின் கட்டணம் செலுத்த புதிய நடைமுறைமடத்துக்குளம் பகுதியில், 6,000க்கும் மேற் பட்ட மின் இணைப்புகள் உள்ளன. வழக்கமாக மின்வாரிய அலுவலர்கள் வீடுகளுக்கு வந்து மின் அளவீடு பணியில் ஈடுபடுவார்கள்.இதற்கு பின்பு, அலுவலக த்தில் சென்று பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த மின் கட்டணம் செலுத்துவதற்கு குறிப்பிட்ட நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
கட்டணம் செலுத்த இறுதி நாள் என, ஒரு தேதி குறிப்பிடுவதும் உண்டு. இந்த நாட்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து மின்வாரியத்தினர் கூறுகையில், 'மின் கணக்கீடு செய்த நாளிலிருந்து, 20 நாட்கள் வரை மின் கட்டணம் செலுத்தலாம். 20 நாட்களை கடந்து விட்டால் அபராதத்தொகை செலுத்த வேண்டும்' என்றனர்.
கிராம இணைப்பு ரோட்டில் ஆக்கிரமிப்பு
கிராம இணைப்பு பாதையில் ஆக்கிரமிப்புகளால், பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளதாக குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகளிடம், மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கலைஞர் நகர், அம்மாபட்டி, சோமவாரப்பட்டியை சேர்ந்த ஒரு பகுதிக்கு, செல்ல கிராம இணைப்பு பாதை உள்ளது.இந்த பாதையில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், வாகனங்கள் செல்வதில், இடையூறுகள் ஏற்படுகிறது; விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.குறுகலான பாதையில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சாக்கடை அமைக்கும் பணியும் நடப்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X