இந்தியா

ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் அமித் ஷா 3 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மத்திய அரசின் சார்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை துவக்கி வைத்து, மக்களுடன் நேரடியாக கலந்துரையாடும் வகையில், அடுத்த சில வாரங்களில் ஜம்மு - காஷ்மீருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்து வந்த சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதைஅடுத்து, ஜம்மு - -காஷ்மீர் மற்றும் லடாக் என
  ஜம்மு - காஷ்மீர் ,அமித் ஷா 3 நாட்கள் , ஆய்வு

மத்திய அரசின் சார்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை துவக்கி வைத்து, மக்களுடன் நேரடியாக கலந்துரையாடும் வகையில், அடுத்த சில வாரங்களில் ஜம்மு - காஷ்மீருக்கு மத்திய உள்துறை
அமைச்சர் அமித் ஷா மூன்று நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்து வந்த சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதைஅடுத்து, ஜம்மு - -காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில், அங்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை துவங்கியது.இத்திட்டங்கள் குறித்த ஆய்வு மற்றும் விரைவுபடுத்துதல் ஆகியவற்றை மத்திய அமைச்சர்கள் அனைவரும் அவ்வப்போது நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும் என,
பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார்.


latest tamil news




இதன்படி, கடந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அமைச்சர்கள் 36 பேர், ஜம்மு - காஷ்மீருக்கு சென்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அப்போது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களோடு உரையாடினர். இது தொடர்பான அறிக்கைகளையும் பிரதமர் அலுவலகத்தில் அவர்கள் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் தான், 'மக்களை நோக்கி' என்ற இந்த திட்டத்தின் நிறைவு கட்டமாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீருக்கு செல்ல
உள்ளார்.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், வரும் 22ல் அவரது பயணம் துவங்கும் எனக் கூறப்படுகிறது. அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதுடன், மக்களுடனும் நேரடியாக கலந்துரையாடவும் அமித் ஷா திட்டமிட்டு
உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-202111:08:06 IST Report Abuse
Vittalanand சொந்த செலவா கட்சி செலவா அரசு செலவா ?
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-202107:57:31 IST Report Abuse
Vittalanand இவர் சந்திர மண்டலத்துக்கு சென்றால் தான் செய்தி. மக்கள் வரிப்பணத்தை கட்சி வேலை பார்க்கிறார்.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
06-அக்-202107:48:05 IST Report Abuse
Suri மூன்று நாட்கள் தங்கியிருந்து ஓய்வா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X