கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு: முன் ஜாமின் மனு வாபஸ்

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் அ.தி.மு.க.,வினர் மோதல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக முன்ஜாமின் கோரி, ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அவர் மீது கூடுதலாக ஆள்கடத்தல் வழக்கையும் சேர்த்ததால், முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார். செப். 24 அன்று அ.தி.மு.க., இணை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் அ.தி.மு.க.,வினர் மோதல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக முன்ஜாமின் கோரி, ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அவர் மீது கூடுதலாக ஆள்கடத்தல் வழக்கையும் சேர்த்ததால், முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார்.

செப். 24 அன்று அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்திற்காக திருநெல்வேலி செல்லும் போது, சாத்துார் வெங்கடாஜலபுரத்தில் கட்சியினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதலில் கிளை செயலாளர் வீரோவுரெட்டி தாக்கப்பட்டார். இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 11பேர் மீது சாத்துார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் வழக்கில் முன்ஜாமின் கோரி ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி மனுத்தாக்கல் செய்தார். இதன் மனு மீது நேற்று முன்தினம் அரசு, எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதை தொடர்ந்து ஜாமின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட இருந்த நிலையில், சாத்துார் போலீசாரால் ராஜேந்திர பாலாஜி மீது கூடுதலாக ஆள்கடத்தல் வழக்கும் சேர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X