மேற்கூரை இல்லாததால் பயணிகள் அவதி : ரயில்வே ஸ்டேஷனில் வசதிகளின்றி போராட்டம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், பிளாட்பார்ம் மேற்கூரை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரயில்வே பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.திண்டுக்கல்-பாலக்காடு அகல ரயில்பாதையில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது.மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில்பாதையாக மேம்படுத்தப்பட்ட போது, உடுமலை பகுதி பயணிகளிடையே ரயில் சேவைகள் குறித்த அதிக எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால், பயன்பாட்டுக்கு
 மேற்கூரை இல்லாததால் பயணிகள் அவதி : ரயில்வே ஸ்டேஷனில் வசதிகளின்றி போராட்டம்

உடுமலை:உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், பிளாட்பார்ம் மேற்கூரை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரயில்வே பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.திண்டுக்கல்-பாலக்காடு அகல ரயில்பாதையில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது.மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில்பாதையாக மேம்படுத்தப்பட்ட போது, உடுமலை பகுதி பயணிகளிடையே ரயில் சேவைகள் குறித்த அதிக எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால், பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகியும், கூடுதல் ரயில்கள் இயக்குவதில் இழுபறி நீடிக்கிறது. மேலும், ரயில்வே ஸ்டேஷனிலும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. கழிப்பிட வசதி முறையாக இல்லாதததால், தொலைதுாரத்தில் இருந்து வரும், பயணிகள் நிலை பரிதாபமாகிறது.

மேலும், இரண்டாவது பிளாட்பார்ம் பகுதியில், மேற்கூரை இதுவரை அமைக்கப்படவில்லை.இதனால், மழைக்காலங்களில், பயணிகள், மழையில் நனைந்தபடி, ரயிலுக்காக காத்திருக்கின்றனர்.முதியவர்கள் மற்றும் பெண்கள், ஒதுங்கி நிற்பதற்கு கூட இடமில்லாமல், பரிதவித்து வருகின்றனர். வெயில் காலத்திலும், பயணிகள் பாதிக்கின்றனர்.கொரோனா பரவல் காரணமாக, அகல ரயில்பாதையில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, தற்போதே ரயில்களில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.முழு வீச்சில், ரயில்கள் இயக்கப்படும் முன்பு, இரண்டாவது 'பிளாட்பார்ம்' பகுதியில், மேற்கூரை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கழிப்பிடங்களை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் அருகில், புதர் மண்டி கிடக்கும் பகுதியை சீரமைப்பு செய்ய வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X