பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் முகாம்: உபகரணங்கள் வழங்க தீவிரம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
வால்பாறை:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க, பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை, தி.மு.க., நகர பொறுப்பாளர் பால்பாண்டி, பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர்.முகாமில், வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட்
 மாற்றுத்திறனாளிகள் முகாம்: உபகரணங்கள் வழங்க தீவிரம்

வால்பாறை:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க, பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை, தி.மு.க., நகர பொறுப்பாளர் பால்பாண்டி, பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முகாமில், வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் இருந்தும், நுாற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளை டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்தனர்.முகாமில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் அமர இருக்கை வசதி இல்லாமல் பல மணி நேரம் காத்திருந்து பெயர்களை பதிவு செய்தனர். சமூக இடைவெளியை மறந்து, நெருக்கமாக நின்றதால், கொரோனா தொற்று பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த் கூறுகையில், 'முகாமில், உடல் இயக்க குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும், பார்வை, மனவளர்ச்சி குறைபாடு, காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, தேவையான உபகரணங்கள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X