ரூ.4.60 லட்சம் கஞ்சா பறிமுதல் பெண் உட்பட 5 பேர் கைது

Added : அக் 06, 2021 | |
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் காரில் கடத்திய ரூ.4.60 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பெண் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.கேணிக்கரை எஸ்.ஐ., குகனேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று காலை பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை வல்லபை நகர் சந்திப்பில் வந்த காரில் இருந்த 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக பரமக்குடி எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெரு

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் காரில் கடத்திய ரூ.4.60 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பெண் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.

கேணிக்கரை எஸ்.ஐ., குகனேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று காலை பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை வல்லபை நகர் சந்திப்பில் வந்த காரில் இருந்த 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பரமக்குடி எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெரு ரஞ்சித்குமார் 31, எமனேஸ்வரம் சிவா நகர் ஹேமலதா 26, ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் ஆறாவது தெரு அஜய்குமார் 21, மார்க் மிக்கேல் சாம்ராஜ் 22, காஞ்சிபுரம் கேளம்பாக்கம் படூர் மாதவன் 20, ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.ரஞ்சித்குமார், ஹேமலதா மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மதிப்பு ரூ.4.60 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X